காமெடி நடிகைகூட தமிழச்சி கிடையாதா? டெஸ்ட் நயன்தாரா அடுத்த KR விஜயா.. பைத்தியக்கார ரசிகர்கள்: பிரபலம்
சென்னை: மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் படம், தியேட்டருக்கு வராமல் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழ் சினிமா அழித்துவிடாதீர்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வேதனையுடன் கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் தமிழர்களே இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனும் பேட்டி ஒன்றில் வேதனையை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "சினிமாக்கள் பற்றி தமிழர்களிடம் விழிப்புணர்வு இல்லை.. என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லும் பாரதிராஜா, தமிழச்சியை யாருமே நடிகையாகவோ, நடிகராகவோ கொண்டு வரவில்லை..

தலித் சமூகத்திலிருந்து வந்த மேஸ்ட்ரோ இளையராஜா, ஒரு தமிழ் பாடகி, பாடகர்களுக்குகூட பெரிதாக வாய்ப்பு தரவில்லை.. சித்ரா, ஷைலஜா, உன்னி கிருஷ்ணன் இவங்கெல்லாம் யாரு? பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா, பாலச்சந்தர் இவங்களுக்கெல்லாம் தமிழர்களே பிடிக்காது.. ஆனால், முட்டாள் தமிழ் ரசிகர்கள்.. இதுதான் வெளிமாநில நடிகர், நடிகைகளுக்கு பலமாகிறது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா டாப் ஸ்டார்
கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலை தவிர வேறு யாரையுமே உச்ச நடிகர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. ஆந்திராவில், என்டிஆர், என்டிஆர் மருமகன், பிரபாஸ், சிரஞ்சீவி, தவிர வேறு யாரையுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. கர்நாடகாவில் ராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்கள் என்றுதான் பட்டியல் நீளும்.
தமிழ்நாட்டில் மட்டும்தான், நடிப்பவர்கள், பாடுபவர்கள், ஆடுபவர்கள் என யாருமே தமிழர்கள் கிடையாது. ஆனால், படத்தை பார்ப்பவர்கள் மட்டும் தமிழன். அன்று கேரளத்து பைங்கிளி கேஆர் விஜயா, கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி.. மராட்டியான ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றால், இன்று கேரளா நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார்..
காமெடியில்கூட தமிழ் நடிகை இல்லையா
நயன்தாரா அடுத்த கேஆர் விஜயா ஆகிவிட்டார்.. இவர்கள் திரைப்பட உலகத்தை கட்டி ஆள்பவர்கள்.. கவுண்டமணி செந்தில் ரேஞ்சுக்குதான் தமிழன் இருக்கணும்.. மனோரமாவுக்கு பிறகு மலையாளி கோவை சரளாதான் காமெடி நடிகை.. அப்படின்னா தமிழில் காமெடி நடிகையே கிடையாதா? காமெடி செய்வதைகூட கேரள இறக்குமதிக்குதான் தருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இயக்குனர்கள்தான்.. இவர்கள்தான் குற்றவாளிகள்.
கேஆர்விஜயா, பானுமதி, பத்மினி, சரோஜாதேவி என லிஸ்ட் எடுத்தால் தமிழர்களே இல்லை. ஜெயலலிதாவையும் அப்படித்தான் கொண்டுவந்தாங்க.. அவர் முதல்வர் வரை சென்றார். இப்போது அடுத்த முதலமைச்சராக நயன்தாரா வரலாமா? அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தினால், அந்தம்மாவும் அரசியலுக்கு வந்துவிடுவார்.. இப்போது மகாராஷ்டிராவை சேர்ந்த குஷ்பு அரசியலில் இல்லையா?
உச்ச நடிகைகளின் நீலப்படங்கள்
மதத்தால், இனத்தால், மொழியால் நாம் யாரையுமே பிரிப்பதே இல்லை. ஆனால், என்னுடைய பிரதிநிதித்துவம் இங்கு காணாமல் போகிறதே? எனக்கான வாய்ப்புகள் இங்கு பறிபோகிறதே? பம்பாயில் ஒரு தமிழனை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பார்களா? அதை மகாராஷ்டிரா மக்கள் பார்ப்பார்களா? மலையாளத்தில் ஹீரோவாக எத்தனை தமிழனை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள்?
உச்ச நடிகைகளின் நீலப்படங்களே இன்று உள்ளன.. இன்று தாங்கள் அரசியலுக்கு வருவோம் என்று அன்றைய தினம் இவர்களே நினைச்சுகூட பார்த்திருக்க மாட்டார்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து கொண்டிருந்தவர்கள், இன்று அரசியல் பின்புலங்களை வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications