டெலிவரிக்கு பிறகு குண்டான நடிகை! ஆபாசமாக கிண்டலடித்த ரசிகர்கள்.. தரமான சம்பவம் செய்த நீலிமா ராணி
சென்னை: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க தான் பின்பற்றிய உணவு முறை என்ன என்பது குறித்து சீரியல் நடிகை நீலிமா ராணி பகிர்ந்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. நல்ல உயரம், ஒல்லியான தோற்றம் என அழகாக இருப்பார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50 க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி, தென்றல், கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் நான் மகான் அல்ல படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இவர் தன்னை விட அதிக வயது கொண்ட இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
நீலிமாவின் கணவர் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருப்பதாக பலர் கிண்டல் செய்கிறார்கள். இதுகுறித்து நீலிமா கூறுகையில் என் கணவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் அவரை பலர் தாத்தா என கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நான் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை .
அவருக்கு டை அடித்துக் கொள்வதில் விருப்பமில்லை. எனக்கும் அவர் இயற்கையாக இருக்கவே விரும்புகிறேன் என தெரிவித்து கிண்டல் செய்த ரசிகர்களுக்கு நோஸ்கட் கொடுத்தார். இந்த நிலையில் அண்மையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கருவில் இருந்த போது நிறைமாதமாக இருந்த நீலிமா போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு அவர் படுகுண்டாக உடல் எடை அதிகரித்திருந்ததை பார்த்து பலர் கிண்டல் செய்தனர். ஆனால் ரசிகர்கள் மூக்கு மேல் விரல் வைக்கும் அளவிற்கு நீலிமா உடல் எடையை குறைத்திருந்தார். இதுகுறித்து அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் படுகுண்டாகிவிட்டேன்.

பலர் என்னை கிண்டல் செய்தார்கள். பலர் ஆபாசமாகவும் கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் முயற்சிகளை கைவிடவில்லை. தினமும் கீரைகள், பச்சை காய்கறிகளை சாப்பிடுவேன். அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் வேக வைத்த உணவுகளையே அதிகம் எடுத்துக் கொண்டேன்.
உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க ஆளி விதை, சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு மற்றும் சியா விதைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டேன். மேலும் செம்பருத்தி டீ, பிளாக் காபி, கிரீன் டீ போன்றவற்றை தினமும் குடித்தேன். இதனால்தான் வெயிட் லாஸ் ஆனேன் என நீலிமா தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications