நிமிர்ந்து பார்த்த நீலிமா.. மைன்ட் எங்கேயோ போகுதே.. இழைந்தோடும் ரசிகர்கள்!
சென்னை: எந்த டிரஸ் போட்டாலும் உங்களுக்கு தான் பக்காவா பொருந்துகின்றது என ரசிகர்கள் உருகி கொண்டுள்ளனர். அதேசமயம் நீலிமாவின் லேட்டஸ்ட் அவதாரம் ரசிகர்களை உருக வைத்துள்ளது.
எத்தனை வயசு ஆனாலும் என்னுடைய அழகும் வாலிபமும் மாறாது என்பது போல நாளுக்கு நாள் அழகை மெருகேற்றி நீலிமா லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்ததும் அசந்து போயுள்ளனர்.
ரசிகர்கள் கன்னாபின்னாவென கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். அதுவும் இந்த மாதிரி இந்த டிரஸ்ல கூட இவ்ளோ அழகா எனவும் சிலர் பெருமூச்சு விடுகின்றனர் .

ரசிகர்கள் செம
இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்பதையே பலரால் நம்ப முடியவில்லையாம். இளம் கதாநாயகிகளை ஓரங்கட்டுகிர வகையில் தன்னுடைய பால் வண்ண மேனியில் பளபளக்கும் உடையோடு விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கும் இவருக்கு இவருடைய ரசிகை ரசிகர்கள் கமெண்டுகளில் பல்வேறு சந்தேகங்களையும் கேட்டு வருகின்றனர் .

தயாரிப்பிலும் அசத்தல்
இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார் .குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரி பெண்ணாகவும் வில்லத்தனத்தால் மிரட்டும் வில்லியாகவும் தற்போது தயாரிப்பாளராக இருந்தாலும் இது எல்லாவற்றையும் விடவும் எனக்கு பிடித்தது மாடலிங்கில் தான் என மாடலிலும் அசத்தி வருகிறார் .

புரமோஷனல் வீடியோஸ்
அதுவுமில்லாமல் சில நிறுவனங்களின் பொருள்களுக்கு புரோமோஷன் குடுத்து இவர் வெளியிட்ட போஸ்ட்களும் தற்போது வேற லெவல் வைரல் ஆகி விடுகின்றன .இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல நடிகைகள் மீது எங்களுடைய பொருளை வாங்கிக்கொண்டு புரொமோஷன் கொடுக்கவில்லை என புகார் வந்த நிலையில் இவர் தொடர்ந்து பொருள்களுக்கான புரமோசன் வீடியோக்களையும் போட்டோக்களையும் அப்லோட் பண்ணி வருகிறார்

கெட்டப் சேஞ்ச்
ஆனாலும் இவருடைய ரசிகர்கள் பொருள்களை வாங்குராங்கலானு தெரியவில்லை இவருடைய லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து அசந்து பல ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இவர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் தேவர் மகன் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பாண்டவர் பூமி, ஆல்பம் என ஹிட்டான படங்களிலும் குழந்தையாகவே அறிமுகமாகி இருந்தார் .

வில்லியாகவும் கலக்கல்
அதற்கு பிறகு தான் சில படங்களில் இரண்டாம் கதாநாயகியாகவும் கலக்கிக் கொண்டிருந்தார் .இதுவும் போதாது என முதல் முதலில் ஒரு பெண்ணின் கதை என்னும் தமிழ் சீரியலில் நடிக்கத் தொடங்கி மெட்டி ஒலி ,கோலங்கள் ,செல்லமே ,தலையணைப் பூக்கள் ,வாணி ராணி ,தென்றல் என பல சீரியல்களில் கலக்கியிருக்கிறார் .இதில் தலையணை பூக்கள் ,அரண்மனைக்கிளி என இரண்டு சீரியல்களிலும் வில்லி கெட்டப்பிலும் கலக்கியிருக்கிறார்

என்றென்றும் புன்னகை
இதுவும் போதாது என்று இப்பொழுது நிறம் மாறாத பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை என இரண்டு சீரியல்களை ஜீ தமிழில் இவர் தயாரித்துக் கொண்டிருக்கிறார் .ஆனாலும் இவரை பற்றி தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரவி கொண்டுதான் இருக்கின்றன .ஆனால் அவற்றையெல்லாம் காது கொடுக்காத இவர் தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருந்து வருகிறார்.

போட்டோஷூட்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட்டில் எடுக்கும் போஸ்ட்களை போஸ்ட் பண்ணி வருகிறார் .அதுவும் பலரை பிரபலப்படுத்திய டிக்டாக்கில் இவரும் ரொம்பவே பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார் .தற்போது அந்த செயலி தடை செய்யப்பட்டதும் தனது கவனத்தை இன்ஸ்டாகிராமில் செலுத்தி வருகிறார் .

விடாமல் குவியும் ரசிகர்கள்
இவர் கோவிலுக்கு செல்வது முதல் ஷாப்பிங் செல்வது வரை பல விஷயங்களை போட்டோ எடுத்து அதை அவர் அப்லோட் பண்ண அவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட என சமூக வலைத்தளம் பரபரப்பாக போய்க் கொண்டு இருக்கிறது. ஆனாலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 347 கே பாலோவர்ஸ் இருக்கிறார்கள் . அதுமட்டுமல்லாமல் இவர் இதுவரைக்கும் 276 போஸ்ட் போட்டு இருக்கிறார் .

அங்கேயே பார்த்த ரசிகர்கள்
இவர் போஸ்ட் போட்டதும் அதற்கு கமெண்ட் போட வேண்டும் எனவே சிலர் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர் .அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் இவரை வைத்து நன்றாகவே கலாய்த்து வருகின்றனர். இவர் மேலே பார்த்து சிரித்தபடி ரோஸ் கலர் சுடிதாரில் தேவதை போல இருக்கிறாராம் அதுவும் இல்லாமல் இவர் மூக்கில் குத்திய மூக்குத்தியை பற்றி பலர் கேட்டு வருகின்றனர் .என்னதான் இருந்தாலும் இந்த வயசிலும் இவ்வளவு அழகு பாக்குறவங்க கண்ணை உறுத்த தான் செய்யும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications