இந்த மாதிரி அழகா இருந்தா வில்லியா இருந்தாலும் வெறித்தனமாக ரசிப்போம்ல!
சென்னை: சீரியலாக இருந்தாலும் சரி திரைப்படங்களாக இருந்தாலும் சரி ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாகவும் இளமையாகவும் இருக்கும் நடிகைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம் தான்.
அந்த மாதிரி சீரியல் நடிக்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரைக்கும் இளமை குறையாமல் ரசிகர்களுக்கு கண்களுக்கு குளுமை காட்டிக் கொண்டிருக்கும் நீலிமா ராணி போட்டோஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இவர் குழந்தை நட்சத்திரமாக தேவர்மகன் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் யாருடா இந்த குட்டி குழந்தை என்று கேட்கும் அளவிற்கு குழந்தைத்தனமாக நடித்திருந்தார்.

நான் மகான் அல்ல
அதன்பிறகு பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் . நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல என்னும் திரைப்படத்தில் கூட அவரின் பிரண்டாக நடித்திருப்பார். அப்படி சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சின்னத்திரையில் வரவேற்பு அமோகமாக இருந்தது.

கலக்கல் வில்லி
அதனால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் தனது பெயரை நிலைநாட்ட முடிவு செய்திருந்தார். தற்போது இவர் நடிக்காத டிவி சேனல்களை இல்லை என்று கூறும் அளவிற்கு எல்லா சேனல்களிலும் உள்ள சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் பிசியாக இருக்கும் இவர் டைரக்ட் பண்ணுவதிலும் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறாராம். அதனால்தான் அந்த வேலையும் செய்து கொண்டிருக்கிறார்.

போட்டோஷூட்டிலும் கலக்கல்
அது போதாது என்று அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருந்த சீரியல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் கிடைக்கும் நேரங்களில் தாராளமாக போட்டோ ஷூட்டில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். அந்த மாதிரிதான் இவர் இப்போது எடுத்திருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் பலர் நடத்திக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சிலர் தான் ரொம்ப பேமஸ் ஆகி விடுகிறார்கள்.

அதிரடி காட்டுவோம்ல
அந்த மாதிரிதான் ஒரே ஒரு போட்டோவில் இடுப்பை காட்டி ரம்யா பாண்டியன் பிரபலமானார் .அதற்கு முன்பு அவர் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் யார் என்று தெரியாத அளவிற்கு இருந்து கொண்டிருந்தார். ஆனால் இன்ஸ்டாகிராமில் அவருடைய போட்டோ ஷூட் அவருக்கு பேரும் புகழும் வாங்கி தந்தது . அந்த மாதிரிதான் அதன் பிறகும் ஷிவானி , தர்ஷா குப்தா என பலர் இருக்கின்றார்கள் .ஆனால் தற்போது அதே வழியை நீலிமா ராணியும் பின்பற்றி இருக்கிறார்.

புத்தம் புது போட்டோஸ்
இதுவரையிலும் இல்லாத கவர்ச்சியை காட்டி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் ரசிக்க தான் செய்கின்றார்கள். சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஹோம்லியாகவே ரசிகர்கள் பார்த்து விட்டனர். ஆனால் தற்போது இவருடைய இடுப்பு தெரிவது போல எடுத்த புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் இவருடைய ரசிகர்கள்.

சேலையில் அசத்தல் போஸ்
இரண்டு நாளுக்கு முன்பு இவர் போட்ட போஸ்ட் பெரும் வைரலானதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை சேலை கட்டிக்கொண்டு வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அழகான க்யூட் வில்லியாக இருக்கிறீர்கள் சீரியலில் நடிக்கும்போது பலர் உங்களை திட்டி தீர்த்தாலும் உங்கள் குழந்தை போன்ற அழகைப்பார்த்து வில்லியை கூட ரசிக்க தான் தோன்றுகிறது என்று கவிதைகளாக பொழிந்து வருகிறார்கள்
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications