நீயா நானா: உங்க சுயபுத்தி எங்க போச்சு? கைநீட்டி பெண் கேட்ட கேள்வி.. ஆடி போன கோபிநாத்.. அதிர்ந்த அரங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வார நிகழ்ச்சியில் மணமுறிவு செய்த பெண்களை எப்படி சமூகம் பார்க்கிறது என்ற கேள்வியோடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.x
அதில் இந்த வார எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ஆண் ஒருவர் பேசியிருக்கிறார் அதில், விவாகரத்து செய்த பெண்களோடு மற்ற பெண்களும் சேர்ந்து பழகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். ஏனென்றால் விவாகரத்து ஆன பெண்கள் சின்னதாக இருக்கும் பிரச்சனையை பெரிதுபடுத்தி விட்ருவார்கள் என்று சொன்ன காரணத்தை கேட்டு எதிர் பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் கடும் கோபமாக திட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் கோபிநாத்துக்கும் அதிகமாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் சமூகத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளில் கருத்தை வைத்து நிகழ்ச்சியில் தலைப்பு கொடுக்கப்பட்டு அது விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் திருமணம் ஆகி விவாகரத்து செய்த பெண்கள் அதனை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்கிற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் விவாகரத்து செய்த பெண்கள் தங்களுடைய வலி வேதனைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக பெண்கள் வாழ்க்கை துணை சரியாக அமையாத போது அதிலிருந்து விலகி தாங்கள் தைரியமாக வாழலாம் என்று நினைத்தாலும் இந்த சமூகம் பெண்களை வேற மாதிரி முத்திரை குத்தி விடுகிறார்கள். அடங்காதவள், திமிர் பிடித்தவள், நடத்தை கெட்டவள் என்கிற ரீதியில் தான் பலர் பெண்களை பார்க்கிறார்கள். கணவரை இழந்த பெண்களுக்கு இங்கு அரவணைப்பு கிடைக்கிறது.
ஆனால் விவாகரத்து செய்த பெண்களை தான் எல்லோரும் பெரும் குற்றம் செய்தது போல பார்க்கிறார்கள் என்று பலரும் பல்வேறு வேதனைகளை பகிர்ந்திருந்தனர். அதற்கு எதிர் தரப்பில் இருந்த சமூகத்தை சேர்ந்த மக்களும் தங்கள் தரப்பு கருத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த மாதிரி தான் ஒரு நபர் நாங்க விதவை பொண்ணை ஏத்துப்போம். ஆனால் விவாகரத்து ஆணவங்களை நாங்க ஏத்துக்க மாட்டோம்.
ஏன்னா விவாகரத்தான பொண்ணு மற்ற பொண்ணு கிட்ட பேசும்போது சின்னதா இருக்கிற சண்டைய கூட பெருசு பண்ணி, குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பெண்ணை விலக்கி வச்சிருவாங்களோனு நாங்க பயப்படுறோம் என்று சொல்ல,, அதற்கு மணம்முறிவு செய்த பெண்கள் அணியில் இருந்த ஒரு பெண் கடுமையாக சாடி இருக்கிறார். அதாவது உங்களுடைய சுய பத்தி எங்க போயிருக்கு? ஒய் ஆர் யூ டாக்கிங் சம் எக்ஸாம்பிள்.... எனக்கு நீங்க சொல்றது கொஞ்சம் கூட புரியல.

நீங்க சொல்றீங்க விவாகரத்து ஆனவங்க ஒரு பிராப்ளம் என்று, ஆனால் இந்த மாதிரி பிராப்ளம் இல்லாத பெண்களுக்கு இந்த சமூகம் என்ன செஞ்சது? என்று கேள்வி கேட்க அதற்கு கோபிநாத் சரியான கேள்வி தானே என்று எதிரணியை சார்ந்த மக்களிடம் கூறுகிறார். ஆனால் அங்கிருந்த மக்கள் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications