தமிழ் பசங்களுக்கு அம்மாகிட்டே ஸ்பெஷல் அட்டாச்மென்டாமே!
சென்னை: தமிழ் பசங்ககிட்டே உங்களுக்கு பிடிச்சது என்ன? இதுதான் இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானா விவாதம். இதில் வேற்று மாநிலத்து பெண்கள் நம்ம தமிழ் பசங்க பத்தி பேசுறாங்க. அவங்ககிட்டே தங்களுக்கு என்ன பிடிச்சது என்றும் சொல்லி இருக்காங்க.
ஒரு பெண் தமிழ் பசங்க அவங்க அம்மா மேல தனி பாசம் வச்சு இருப்பாங்க. அது எனக்கு பிடிக்கும் என்று சொன்னார். இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டபோது என்னோட ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க அவங்ககிட்டே இதை நான் பார்த்து இருக்கேன்னு சொன்னார்.
இது தமிழ் பையன்களுக்கே கிடைத்த பெருமை. எல்லா மாநிலத்திலும், எல்லா நாட்டிலும் பசங்க அவங்கவங்க அம்மா மேல பாசமாத்தான் இருப்பாங்க. அது என்னவோ தெரியலை தமிழ் பசங்க மட்டும் இதில் முன்னிலையில் இருக்காங்க.

எப்படி தெரியும்?
தமிழ் பசங்க அவங்க அம்மா மேல ரொம்ப பாசமா கேரிங்கா இருப்பாங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் கேட்டபோது, எனக்கு நிறைய தமிழ் பசங்க ஃ பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க கூட பழகிப் பார்த்தப்போதுதான் இது தெரிஞ்சுது என்று கூறினார். இங்கே யாராவது உங்க தமிழ் பசங்க ஃபிரண்ட்ஸ் வந்து இருக்கங்களா என்று கேட்டபோது பார்த்திபன் என்று ஒரு பையனை காண்பித்தார்.

அப்படித்தான் பார்த்திபன்
பார்த்திபன் அப்படித்தான் அம்மா மேல ரொம்ப அட்டாச்மென்டா இருப்பான். நாங்க நிறைய பேர் ஃபிரண்ட்ஸா அவங்க வீட்டுக்கு போலாம்னு முடிவு செய்தால், பார்த்திபன் அவங்க அம்மாகிட்டே எல்லாருக்கும் சமைச்சு வைக்க சொல்லி சொல்லிடுவான். அவங்க அம்மாவும் பிள்ளை மேல இருக்கற அட்டாச்மென்ட்ல கேர் எடுத்து சமைச்சு வச்சு இருப்பாங்க. எங்களையும் சாப்பிட வச்சு கவனிச்சு ரொம்ப கேரிங்கா இருப்பாங்க என்று சொன்னார் அந்தப் பெண்.

உங்களுக்கு மாமியார்
இப்படி ஒரு மாமியார் உங்களுக்கு கிடைக்கணும்னு நீங்க ஆசைப்பட்டு இருக்கீங்களா என்று கோபிநாத் கேட்க,ம்ம் ஆமாம் என்று அசால்ட்டாக பதில் சொன்னார் அந்த பெண். பார்த்திபா என்ன என்று பார்த்திபனை கலாய்த்தார் கோபிநாத். தமிழ் பசங்க என்னதான் வெளி மாநில பெண்களுடன் ஃப்ரண்ட்ஷிப் வச்சு இருந்தாலும், தமிழ்நாட்டு பாரம்பரியத்தை பழக்க வழக்கத்தை விட்டுக் கொடுக்காமல் அதே சமயம் தாய் மீது ரொம்ப பற்று உள்ளவர்களாகவும் இருப்பது நமது தமிழ் நாட்டுக்கே கிடைத்த பெருமை.

சீரியல் சினிமா
வெளி மாநிலங்களில் இருந்து சினிமா, சீரியலில் நடிக்க வரும் பெண்கள் பெரும்பாலும் தமிழ் பசங்களை பார்த்துத்தான் ஆசைப்படுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் பெண்கள் மீது தமிழ் பசங்க காட்டும் மரியாதை, அம்மா மற்றும் உடன் பிறந்த சகோதரிகளிடம் அவர்கள் காண்பிக்கும் பாசம், அக்கறை இதெல்லாம்தான் மற்ற மாநில பெண்களை தமிழ் பசங்க பக்கம் பார்க்க வைத்து இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications