ஒன்றரை பவுன் தங்கம் வெறும் 157 ருபாய்.. எங்கே தெரியுமா? பில்லோடு வந்த பெண்.. ஆடிப்போன கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மே இருபதாம் தேதிக்கான எபிசோடில் பாரம்பரிய நகைகளை விரும்பும் பெண்கள் vs எளிமையான நகைகளை விரும்பும் பெண்கள் என்று இரண்டு தரப்பில் பெண்கள் கலந்து கொண்டு
விவாதித்தனர்.
இந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆபரணங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகிறது. ஒரு பக்கத்தில் இருக்கும் பெண்கள் நாங்கள் பல ஆண்டுகளான பழமையான தங்க நகைகளை வைத்திருக்கிறோம் என்று பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கத்தில் இருக்கும் பெண்கள் இவ்வளவு பணத்தை கொண்டு போய் தங்கத்தில் போட்டு அதை பாதுகாக்கவே பெரிய பாடாக இருக்கிறது என்று நாங்கள் இதற்கு மாற்றாக எளிமையான நகைகளுக்கு மாறிவிட்டோம் என்று ஆண்களின் மனதை குளிர வைத்திருக்கின்றனர். இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பழமையான தங்க நகைகளை வைத்திருக்கும் பெண்களைப் பார்த்து சில வீடுகளில் சண்டை வந்துவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ எதிரணியில் இருக்கும் பெண்கள் எளிமையான நகைகளை குறித்து பேசி ஆண்களின் மனதை குளிர வைத்திருக்கிறார்கள்.
இப்படி சுவாரசியமான விவாதங்கள் நேற்று நடந்து கொண்டிருந்த போது தான் பலரையும் வியக்க வைத்த ஒரு சம்பவமும் நடைபெற்றது. அதாவது பழமையான நகைகள் வைத்திருந்த அணியில் இருந்த ஒரு பெண் இது என்னுடைய மாமியார் நெக்லஸ். அவர் இதை 1950இல் வாங்கி இருக்கிறார். அதற்கான பில் இருக்கிறது என்று கோபிநாத் இடம் பில்லை கொடுக்க அவர் அந்த பில்லை பார்த்ததும் அதிர்ச்சியாகி இருக்கிறார். அந்த நேரத்தில் நேரத்தில் ஒன்றரை பவுன் தங்கத்தின் விலை வெறும் 157 ரூபாய்க்கு மட்டுமே இருந்திருக்கிறது. இதை பார்த்தால் இப்போது எல்லோருக்கும் வியப்பாக இருந்தாலும் அப்போது உள்ள நிலவரப்படி இந்த பணம் அந்த நேரத்தில் அதிகப்படியான பணமாக தான் இருந்திருக்கும். காலத்திற்கு ஏற்ப நாளுக்கு ஒரு விலை என்று அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் தங்க நகைகளை நடுத்தர வர்க்கத்தினர்கள் வாங்க முடியுமா? என்ற கேள்வி தான் பலருடைய மனதிலும் இருக்கிறது. ஆனால் நேற்றைய விவாதத்தில் பல பெண்கள் அசால்ட்டாக இது 5 பவுன் 10 பவுன் என்று நகைகளை விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு எப்போதுமே நகைகள் மீது ஆர்வம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அது ஓவர் ஆர்வமாக மாறுவதும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக மாறிக் கொண்டிருக்கிறது.
தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் ஆர்வம் மற்றும் நுகர்வு காரணமாகவும் மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்த தங்கத்தின் விலை இப்போது வேகம் எடுத்து இருக்கிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று பலர் கருத்துக்கணித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நீயா நானா நிகழ்ச்சியில் தங்கத்தின் பெருமையை காட்டி பலருடைய ஏக்கங்களை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications