நீயா நானா: இல்லத்தரசிகள் சோம்பேறிகள்..! வார்த்தையை விட்ட பெண்.. கோபிநாத் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடில் "அதிகமாக படித்தாலும் வீட்டை கவனித்து வரும் பெண்களும், இவர்கள் படித்ததை சரியாக பயன்படுத்தவில்லை" என்று ஆதங்கப்படும் பெண்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். அப்போது ஒரு பெண் "சோம்பேறிகள் என்ற பெயருக்கு இல்லத்தரசிகள் என்று படித்த பெண்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்" என்று சொன்ன வார்த்தை அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனாலேயே பல நேரங்களில் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் தலைப்புகள் பிரபலம் அடைந்து இருக்கிறது. அதிலும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சமூக வலைத்தளத்திலும் பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள்.

அதற்காகவே இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் அதிகமானோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு படிக்கும்போது குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு போகும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ஒரு சில மாணவர்களின் வாழ்க்கை பலரையும் வேதனைப்பட வைத்தது.
அதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் கூட அப்பாவின் அன்பை புரிந்து கொள்ளாத மகன்களும் தங்களுடைய மகன்கள் மீது தங்களுக்கு இருக்கும் பாசத்தை வெளிகாட்டத் தெரியாத அப்பாக்களும் கலந்து கொண்டிருந்தனர். அப்போதும் பல மகன்கள் அப்பாவை புரிந்து கொள்ளும் வகையில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றது.
அந்த வரிசையில் இந்த வாரம் அதிகமாக படித்துவிட்டு வீட்டில் குடும்ப சூழ்நிலையை பார்த்துக் கொண்டு குடும்பத்தை கவனிப்பதே தனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லும் பெண்களும், இவர்கள் கஷ்டப்பட்டு படித்துவிட்டு வீட்டை கவனிக்க போகிறார்கள் என்றால் எதற்காக இவர்கள் படித்தார்கள்? படித்த படிப்புக்கு சரியான வேலை பார்க்க வேண்டாமா? என்று ஆதங்கப்படும் பெண்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரம் காரசாரமான தலைப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வியாழக்கிழமை வெளியாகிவிடும். ஆனால் இந்த வாரம் இன்று வெள்ளிக்கிழமை தான் வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோக்கள் தற்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் ஒரு ப்ரோமோவில் ஒரு பெண் நான் படித்த படிப்பு என்னுடைய குடும்பத்தை நிர்வகிப்பது தான்.
குடும்பத்தை விட்டு வெளியே போனால் தான் உலகம் தெரியும் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அந்த உலகத்தில் இருந்து விட்டு வீட்டுக்குள் வந்த பிறகுதான் என்னுடைய உலகம் எது என்பது எனக்கு புரிந்தது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு எதிரணியில் இருந்த ஒரு பெண் இவர்கள் சோம்பேறிகளாக இருப்பதற்கு ஹோம் மேக்கர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் விமர்சிக்கப்படுகிறது.
பொதுவாக வேலைக்கு சென்று வேலை பார்த்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகராக வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களும் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் நிலைமை அவ்வளவு எளிமையானது கிடையாது. ஆனால் தங்களுடைய குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் பார்த்து பார்த்து எல்லா வேலைகளையும் செய்வதால் தான் வெளியே போயிட்டு வருகிறவர்கள் வீட்டிற்குள் வந்ததும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆனால் இந்த பெண் வீட்டில் சோம்பேறிகளாக இருப்பதற்கு படித்தவர்கள் ஹோம் மேக்கர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னது இப்போது இணையத்தில் பலருடைய கருத்தைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் இன்னொரு பிரமோவில் ஒரு பெண் வீட்டிற்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸா படுக்கும் போது எவ்வளவு நிம்மதியாக இருக்கும் தெரியுமா? ஆனால் வெளியே வேலைக்கு போனால் அப்படி இருக்க முடியாது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
யாருக்காக நாம் அவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறோம்? நம்மை நாமே முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கும் நிலையில் அதை கேட்ட கோபிநாத் இது கேட்க அருமையாக இருக்கிறதே.. கேட்கும்போதே ரிலாக்ஸா இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சோம்பேறிகள் தான் ஹோம் மேக்கர்ஸ் என்று சொன்ன பெண்ணுக்கு கோபிநாத் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று கேள்விகள் இணையத்தில் குவிந்து வருகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications