நீயா நானாவில் சீரியல் நடிகைகளும்..அவர்களது ரசிகைகளும்!
சென்னை: விஜய் டிவியின் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகளும், அவர்களது ரசிகைகளும் சந்தித்துக்கொள்கிறார்கள்.
விஜய் டிவியின் அத்தனை சீரியல் நடிகைகளும், அந்த சீரியல் நட்சத்திரங்களின் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உள்ளனர்.
நிகழ்ச்சியை கோபிநாத் வழக்கம் போல சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.

நடிகைகளும் ரசிகைகளும்
கோபிநாத், சீரியல் நடிகைகளும் அவர்களின் ரசிகைகளும் இங்கே இருக்காங்க. அதோடு சீரியலில் நடிக்கும் வில்லிகளும் இங்கே இருக்கிறார்கள். இவர்களை என்னவெல்லாம் நீங்க திட்டி இருப்பீங்க என்று கேட்டு சொல்ல சொன்னார் கோபிநாத்.

கண்ணம்மா கோபம்
எனக்கு இந்த புள்ள கண்ணம்மா மேல கோபம் கோபமா வருது என்று ஆரம்பித்தார் ஒரு பெண். பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா பற்றித்தான் அந்த பெண்மணி பேசினார். மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒளிச்சு வைக்காம பாதியில வச்சுட்டு போறியே.. அது பறந்து போயி கரெக்ட்டா மாமியார் காலடியில் விழுது.இப்படியா இருப்பாங்க என்று கோபித்துக் கொண்டார்.

தேன்மொழி மதர் இன் லா
தேன்மொழி பிஏ சீரியலில் தேன்மொழியின் மதர் இன் லாவை தேன்மொழி அப்படித்தான் கூப்பிடுவாள். அவங்களை ஒரு பெண் நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க.. நாசமா போயிடுவீங்க என்று திட்டினார். சீரியலில் தேன்மொழிக்கு சோறு கூட போடாமல் பட்டினி போடுபவர் இந்த மாமியார். அவர் திட்ட திட்ட, மாமியாராக நடிக்கும் இவங்க தேங்க்யூ என்று சொல்லிக்கொண்டு இருந்தாங்க.

அரண்மனை கிளி சீரியல்
அரண்மனை கிளி சீரியல் ஜானுவுக்கு ஆதரவாக ஒரு பெண்மணி பேசினார். மீனாட்சி அம்மாவே உங்களை வெறுத்து ஒதுக்கிட்டாங்க. நீங்க என்ன அவங்களுக்கு சப்போர்ட் பண்ண போறேன்னு போறீங்கன்னு கேட்டுகிட்டு இருந்தாங்க.
இப்படி சீரியல் கதைகளை உண்மை என்று நம்பி அதற்கு ஒரு தனி நிகழ்ச்சி வைக்கும் அளவுக்கு காலம் இருக்கிறது பாருங்கள்!
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications