நீயா நானாவில் உடைக்கப்பட்ட முதலாளித்துவம்.. கண்கலங்க வைத்த காட்சி..! கோபிநாத் கேட்ட நச் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் மார்ச் 26 ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் சிறு தொழில் முதலாளிகள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொழிலாளிகள் சாவுக்கு கூட போவதற்கு எங்களுக்கு முதலாளிகள் லீவு தரவில்லை என்று தங்களுடைய குறைகளை கூறி இருக்கின்றனர்.

தொகுப்பாளரின் தனித்திறமை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல வருடங்களாக தொடர்ந்து கோபிநாத் தொகுப்பாளராக இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் எடுத்து வைக்கும் கருத்துக்கள் நடுநிலையாக இருப்பதாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி அவரை பாராட்டி வருகின்றனர். இருதரப்பு வாதங்களையும் சரியாக கேட்டு தன்னுடைய மனதில் தோன்றுவதை முகத்தில் அடித்தது போன்று சபையில் எடுத்து உரைத்து அதில் இருக்கும் நிறை குறைகளை விரிவாக எடுத்து பேசுவதில் கோபிநாத்துக்கு நிகர் எவருமில்லை என்று அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

முதலாளிகளின் குற்றசாட்டு
ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டு வரும் அந்த வகையில் இந்த வாரம் சிறு தொழில் முதலாளிகள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரின் இரண்டு அணியாக பிரிந்து தங்களுடைய கருத்துக்களை பேசி வருகின்றனர். அதில் ஒரு தொழிலாளி பேசிய வார்த்தையை கேட்டு கோபிநாத் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார். அதில் சிறு தொழில் முதலாளிகளிடம் தமிழ் தொழிலாளர்களிடம் இருக்கும் குறைகள் என்ன என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதில் தங்களுடைய குறைகளை கூறி வருகின்றனர். ஒரு சில முதலாளிகள், தமிழ் தொழிலாளர்கள் சொல்லாமல் லீவு போடுறாங்க என்று கூறுகிறார்கள். அதற்கு தொழிலாளிகள், சொன்னால் லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்க அதனால் தான் நாங்க அப்படி செய்கிறோம் என்று கூறுகிறார்கள்.

தொழிலாளியின் கேள்வி
இப்படி இருக்கையில் இன்னொருவர் கூறுகிறார். திங்கள்கிழமை ஆனால் கண்டிப்பாக வேலைக்கு வர மாட்டாங்க என்று கூற, அதற்கு தொழிலாளிகளில் ஒருவர் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தந்தால் நாங்கள் ஏன் திங்கள்கிழமை விடுமுறை எடுக்கிறோம் என்று கேள்வி கேட்கிறார்.இந்த நிலையில் தொழிலாளியில் ஒருவர் ஒரு நாள் லீவு போட்டா கூட என்ன சொல்றாங்கன்னு தெரியுமா? எனக்கு திடீரென ஒரு உறவினர் வீட்டில் இறப்பு செய்தி வருகிறது அங்க போக கூடாது என்று சொல்றாங்க. அப்போ நான் உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு இவங்களுக்காக மெஷினோடு மிஷின் ஆக மாறிவிட வேண்டுமா? என்று கேள்வி கேட்கிறார்.

கோபிநாத்தின் கேள்வி
அதற்கு முதலாளிகளில் ஒருவர் மூன்று நாட்கள் நாங்கள் இவர்கள் போய்விட்டால் இவர்களுடைய வேலைகளை கூட இருந்து நாங்கள் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அது அவங்களோட க்ளோஸ் ரிலேட்டிவ் ஆக இருக்காது. ஆனாலும் லீவு போடுறாங்க என்று முதலாளி விளக்கம் கொடுக்கிறார். அதற்கு கோபிநாத் ஒருவர் லீவு போட்டா நீங்க அவங்களுக்கு சம்பளம் உண்டா? இல்ல கட் பண்ணிடுவீங்களா? என்று கேட்க சம்பளம் கிடையாது என்று முதலாளி சொல்ல, அப்போ சம்பளம் எனக்கு கிடைக்கலானாலும் பரவாயில்லை என்று ஒருத்தர் போடுரார்னா அவர் ஏன் லீவு போடுறார்? என்று கேள்வி எழுப்புகிறார். தற்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications