நீ பேசுவதை கேட்கும் போது எனக்கே செம காண்டு ஆகுது! நீயா நானா அரங்கத்தில் இளைஞரை திட்டிய கோபிநாத்

புது திரைப்படம் ரிலீஸ் ஆவது குழந்தை பிறகும் நாளில் இருக்கும் எதிர்பார்ப்பு போன்றது என்ற ரீதியில் பேசிய இளைஞரை கோபிநாத் திட்டி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கியில் பிப்ரவரி 26 ஆவது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என இருதரப்பினர் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்ற அணியில் இருந்து பேசிய ஒரு நபரை கோபிநாத் திட்டி இருக்கிறார்.

விவாத நிகழ்ச்சி

விவாத நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பல வருடங்களாகவே நல்ல மதிப்பை பெற்று தனி இடத்தை பிடித்திருக்கிறது இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபிநாத் ஒருவரிடம் கோபமாக திட்டுவது போன்று அந்தப் பிரமோ இருக்கிறது. விஜய் டிவியில் இதுவரைக்கும் பல ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோவாக முதன்மை இடத்தில் நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக இருந்து வருகிறது. எதிர் எதிர் கருத்துக்களை உள்ளவர்களை எதிரெதிர் அமர வைத்து அவர்களுக்குள் விவாதம் நடத்தி அதற்கு ஒரு தீர்வு சொல்லும் விவாத நிகழ்ச்சி ஆக அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது.

நடுநிலையான தொகுப்பாளர்

நடுநிலையான தொகுப்பாளர்

நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளர் என்றால் இவரை போன்று இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் மெச்சி கொள்ளும் வகையில் இருதரப்பு கருத்தையும் கூலாக கேட்டு அதற்கு தக்க முடிவையும் சொல்லி சரியாக பேசிய நபர்களுக்கு பரிசு கொடுத்து அவர்களை பாராட்டவும் செய்து இருக்கிறார். அதே நேரத்தில் சிலருடைய அபத்தமான கருத்துக்களுக்கு அந்த இடத்தில் பதிலடி கொடுத்து சுட்டிக்காட்டவும் தவறவில்லை என்று ஒவ்வொரு முறையும் கோபிநாத் நிரூபித்து வருகிறார். அதுபடி தான் தற்போது இந்த வாரம் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என இரு தரப்பு கருத்துக்களை கொண்ட நபர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த வார விவாதம்

இந்த வார விவாதம்

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. அதுவும் முதல் நாள் ஷோ பார்ப்பதை அவர்களுடைய ரசிகர்கள் கெத்தாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரி முதல் நாள் ஷோ பார்க்கும் போது ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இப்படி செய்வதால் எங்களுக்கு வெறுப்பாகவும் பயமாகவும் இருக்கிறது என்று எதிர்தரப்பு நபர்கள் தங்களுடைய வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இருதரப்பு கருத்துக்களை உடையவர்களையும் எதிர் எதிரே அமர வைத்து கோபி நாத் விவாதம் செய்து கொண்டு இருந்தார். அப்போது பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர்.

கருத்தைக் கேட்டு திட்டிய கோபிநாத்

கருத்தைக் கேட்டு திட்டிய கோபிநாத்

ஒருவர் கூறும்போது முதல் நாள் ஷோ பார்க்கும் போது இவர்கள் கத்தும் சத்தம் தான் கேட்கிறது. படம் சுத்தமாக கேட்கவில்லை என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மற்றொருவர் பேசும்போது முதல் நாள் படத்துக்கு செல்வது என்பது எனக்கு குழந்தை பிறக்கும் போது வருகிற அனுபவம் என்கிற மாதிரி பதிலளிக்க அப்போது குறிப்பிட்டு பேசிய கோபிநாத் நீ பேசுவது எனக்கு காண்டாக இருக்கிறது. குழந்தை பிறக்கும் சமயத்துடன் திரைப்படம் வெளியாவதை ஒப்பிட்டு பேசுவதெல்லாம் ஓவராக இல்லையா? என்று அந்த நபரை திட்டினார். அமைதியாக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் கோபிநாத்தையே இவர் இப்படி கோபப்படுத்தி விட்டார் என்று நெட்டிசன்கள் இந்த பிரமோவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+