வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குமிடம்...?
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் உங்கள் பையனுக்கு கல்யாணம் பண்ணும்போது பெண் வீட்டில் சீர் வரிசையா இதையிதை கேட்கணும்னு வச்சு இருப்பீங்கள்ல அது என்ன என்னன்னு கேட்டார்.
அப்போதுதான் ஒரு பெண்மணி 30 பவுனுங்க சார்.. 30 பவுனு வீட்டுக்கு தேவையான ஜாமான் என்று சொன்னார்.
என்னென்ன பாத்திரம் கட்டாயம் என்றபோதுதான் அந்த பெண்மணி கூறியது வியப்பாக இருந்தது.

கட்டில் பீரோ
கட்டில்..பீரோ...ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்..டிவி என்று அடுக்கிக் கொண்டே போனார். அப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத், எனக்கு என்னென்னா... வீட்டுக்குத் தேவையான பாத்திரம்னா புரியுது. ஆனால்.. பீரோ எப்போ பாத்திரம் ஆச்சு?

அனைத்து பாத்திரங்களும்...
வாஷிங் மெஷின் எப்போ பாத்திரம் ஆச்சு? கட்டில் எப்போ பாத்திரம் ஆச்சு? டிவி எப்போ பாத்திரம் ஆச்சு?:என்று கேட்டபோது.. அந்த பெண்மணி சிரித்துக் கொண்டே வீட்டுக்குத் தேவையான அனைத்து பாத்திரங்களும் சார் என்று சொன்னார். அதற்கு கோபிநாத் கிண்டலாக வீட்டுக்குத் தேவையான அனைத்து பாத்திரங்களும் கிடைக்குமிடம்... என்று டேஷ்... விட்டார்.

டிரெடிஷனல் பாத்திரம்
முதல் முதல் பொண்ணு வரும்போது ரெண்டு குத்து விளக்கு, ஒரு காமாட்சி விளக்கு, ஒரு மரக்கா, ஒரு படி, ஒரு முக்காலி அவசியம் எடுத்து வர வேண்டும் என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி சொன்னார்.ஒரு கும்பா திண்டுக்கல் பக்கம் எடுத்து வரணும் சார். அதுல தண்ணி எடுத்துட்டு வந்து வாய் கொப்பளிச்சுட்டு மாப்பிள்ளை பால் வாங்கி குடிப்பாங்க சார்னு சொன்னார்.

கடை ஓனர் கூட
டிரெடிஷனல் பாத்திரம்னு கேட்ட உடனே இதைத்தானே முதலில் சொல்லி இருக்கணும். டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின்..பீரோ.. கட்டில்னு அடுக்கிகிட்டே போறீங்களே.. கடை ஓனர்கூட இப்படி சொல்லி இருக்க மாட்டார்னு கோபிநாத் சொன்னார்.
இப்படி பல்வேறு தாய்மார்கள் வித்தியாசமான சீர்வரிசைகள் கேட்கும் உண்மை நிகழ்ச்சியைப் பார்க்க நாளை பகல் 12 மணிக்கு விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை பாருங்கள்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications