பொண்டாட்டினாலே இப்படித்தாங்க.. ஓடவும் முடியாது.. ஒன்னும் பண்ணவும் முடியாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொண்டாட்டிக்குப் பயப்படாத கணவர் உண்டா.. உலகில் எங்குமே கிடையாது.. ஏன் சிவனே கூட பார்வதியிடம் பம்மித்தானே போக வேண்டியிருக்கு.. அதுதாங்க உலக நியதியும் கூட.. சக்திக்குள் சிவன் அடக்கம்.. சிவனைப் பிரியாத சக்தி... இதுதான் இறை நியதி.

சரி அதை விடுங்க.. இப்ப விஷயம் என்னன்னா விஜய் டிவியில் நாளை ஒளிபரப்பாகவுள்ள நீயா நானா குறித்துதான் பேசப் போறோம்.. கணவன் மனைவிக்கு இடையே செல்போனில் பிரைவசி தேவையா.. இதுதாங்க டாப்பிக்.,. செம டாப்பிக்தான்.

இந்த டாப்பிக்கில் கலந்து கொண்டு பேசிய ஒரு கணவன் மனைவியின் பேச்சை வைத்து புரோமோ போட்டுள்ளது விஜய் டிவி. அதைப் பார்த்தாலே புரோகிராம் எந்த அளவுக்கு களேபரமாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

பிரைவஸி லாக்

பிரைவஸி லாக்

அந்த கணவன் மனைவி இடையே செல்போனில் பிரைவசி லாக் போடுவது குறித்த விவாதம் போகிறது. கோபிநாத் மனைவியிடம் கேட்கிறார். உங்க கணவரது செல்போனில் என்ன செய்வீர்கள் என்று. அதற்கு அவர் சொல்கிறார், "பேச்சுலர் குரூப்னு ஒன்னு இருக்கு. அதை மட்டும் பார்க்காதே என்று எனது கணவர் சொல்வார். நான் டெய்லி அதைத்தான் பார்ப்பேன்" என்று.

மனைவிக்கு உரிமை

மனைவிக்கு உரிமை

இதைக் கேட்ட கோபிநாத், அவர்தான் பார்க்கக் கூடாதுன்னு சொல்றாரே பிறகு ஏன் பார்க்கறீங்க என்று. அதுக்குத்தான் பிரைவசி போடச் சொல்றது என்று மனைவி பதிலளிக்கிறார். இதையடுத்து கணவரிடம் திரும்பி, நீங்க ஏங்க லாக் போடக் கூடாதுன்னு கோபிநாத் கேட்கிறார். அதைக் கேட்ட கணவர், "வெளியாள் பார்க்காமல் இருக்கத்தான் லாக் போடுவது. மனைவியிடம் அப்படி இருக்க முடியாது. அவர் பார்க்க உரிமை உண்டே" என்று சொல்கிறார் (நல்ல புருஷன் போல).

என்ன பண்ணுவீங்க

என்ன பண்ணுவீங்க

இதையடுத்து கோபிநாத், சரி உங்க கணவரோட போனை லாக் போட்டு பூட்டியாச்சு என்ன பண்ணுவீங்க என்று கேட்டார். அதற்கு மனைவி சிரித்தபடி அதெப்படி சார் என்று மழுப்புகிறார். கணவரோ, பாஸ்வேர்ட் கேட்பார் சார் என்றார். அதற்கு மனைவியும், ஆமா, கண்டிப்பா கேட்பேன் என்று கூறிச் சிரிக்கிறார்.

லாக் போட்ருவியா

லாக் போட்ருவியா

இதைக் கேட்ட கோபிநாத், இது எப்படி இருக்குன்னா செய்யுன்னு சொல்வேன்.. ஆனால் செய்யக் கூடாது. அப்படித்தான் சொல்வேன்.. லாக் போடுன்னு சொல்வேன்.. லாக் போட்ருவியா என்று இருக்கிறது என்று கேட்க மனைவி முகத்தில் அப்படி ஒரு வெட்கப் புன்னகை.. இருக்கலாம் சார் என்று வேறு ஒரு வாக்குமூலம்.

இதுதாங்க பொண்டாட்டி தந்திரம்ங்கிறது.. தப்பவும் முடியாது.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. நாளைக்கு மறக்காம நீயா நானா பாருங்க மக்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+