Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி எப்போதுமே சமூகத்தில் நடக்கும் உண்மையான பிரச்சனைகளை நேராக பேசும் மேடையாக இருந்து வருகிறது. இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடு அதைவிட ஒரு படி மேலே சென்று பலரின் மனதையும் நெகிழ வைத்தது.

"காதல் தோல்வியால் கலங்கி நிற்கும் இளைஞர்கள் - அவர்களை தேற்றும் குடும்பத்தினர்" என்ற தலைப்பில் நடந்த இந்த விவாதத்தில், யாமினி என்ற இளம் பெண் பகிர்ந்த கதை தான் முழு நிகழ்ச்சியின் கவனத்தை கவர்ந்தது.

Neeya Naana Gopinath vijay tv

9 வருட காதல் பிரிவு

யாமினி பேசும்போது சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நேராக மனசைத் தொட்ட மாதிரி இருந்தது.
அவர் 9 வருடங்களாக ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு சாதாரண காதல் இல்லை... வாழ்க்கையையே அந்த உறவுக்காக கட்டி வைத்த மாதிரி.

ஆனா ஏதோ கருத்து வேறுபாடு... புரியாத சில விஷயங்கள்... அதனால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். பிரிவுக்கு பிறகு பலர் மாதிரி யாமினி அங்கிருந்தே நின்று விடவில்லை. கடந்த 8 மாதங்களாக அந்த உறவை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நான் டாக்ஸிக் ஆகிட்டேன்

அவர் சொன்ன ஒரு வரி எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்தது, "நான் டாக்ஸிக் ஆகிட்டேனு எனக்கே தெரிகிறது. அவருடன் பேச வேண்டும் என்பதற்காக என்னுடன் இருந்த நண்பர்களை அழைத்து "அவரை என்னிடம் பேச சொல்லுங்க" என்று கெஞ்சி கொண்டிருக்கிறேன்.

தவறு என்று தெரிந்தும்... அந்த சுற்றத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறேன் என்று அவர் அழுதபடி சொன்னது பலரையும் எமோஷனலாக கனெக்ட் செய்தது.

கோபிநாத்தின் பதில்

அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் மிகவும் அமைதியாகவும், அதே நேரத்தில் தாக்கம் உள்ளவிதமாகவும் பேசினார்.

"நீங்க இந்த உறவிலிருந்து வெளியே வரணும் என்று நினைக்கிறீங்க... ஆனா உங்க மனசு அதுக்கு ரெடி இல்லை. அதுதான் உண்மை." அதுக்குப் பிறகு அவர் ஒரு உதாரணம் கொடுத்தார்:

"கிராமத்தில் எதுவுமே தெரியாத ஒரு பெண்ணுக்கு நல்ல கணவர் கிடைக்கிறார்... அவர் மீது அந்தப் பொண்ணு உயிரையே வைத்திருக்கிறார் ... ஆனால் ஒரு நாள் எதிர்பாராத விபத்தில் அந்தக் கணவர் பிரிந்து போய்விட்டால். அந்த பெண் என்ன பண்ணுவாங்க?" இந்த கேள்விக்கு யாமினியால் பதில் சொல்ல முடியவில்லை.

அதற்கு கோபிநாத் சொன்னது தான் முக்கியமான பாயிண்ட், நடந்தது நடந்தாச்சு... அடுத்தது என்ன செய்யணும் என்று தான் அவர்கள் நினைப்பாங்க. அடுத்த தனது குழந்தைகளுக்கு ஆகவும் தன்னுடைய வாழ்க்கைக்காகவும் பிரச்சனைகளோடு எதிர்த்து நிற்பாங்க.

நீங்க அவருக்கு டார்ச்சர் இல்ல

அவர் இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தையும் புரிய வைத்தார். "நீங்க அவருக்கு டார்ஜர் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறீங்க... ஆனா அந்த டார்ச்சர் உங்களுக்குத்தான் அதிகமா பாதிக்குது..

"அவருக்கு கொஞ்சம் டைம் கொடுங்க... பழைய நல்ல நினைவுகளாக உங்களை நினைக்கணும்... இப்போ இருக்கிற யாமினியை பார்த்து பயப்படக்கூடாது."

"அவரை தொடர்ந்து தொடர்பு கொள்வது... அவருக்கும் பிரஷர்... உங்களுக்கும் வலி." என்று கோபிநாத் சொன்னார்.

யாமினிக்கான வாழ்க்கை திருப்பம்

பின்னர் கோபிநாத் நேராக கேள்வி கேட்டார், "நீங்க இந்த வாழ்க்கையில் என்ன செய்யணும் என்று நினைக்கிறீங்க?.. அதற்கு யாமினி, "நான் நிறைய சம்பாதிக்கணும்... என் குடும்பத்துக்காக ஏதாவது செய்யணும்..." இதைத்தான் பிடித்து கொண்டு கோபிநாத் "அதுதான் உங்க பாதை... முதலில் உங்க goal set பண்ணுங்க... எதை நோக்கி போகணும்னு தீர்மானிங்க." என்று அட்வைஸ் கொடுத்தார்.

யாமினி மாதிரி பலர் இருக்காங்க. காதல் முடிஞ்சதும் வாழ்க்கையே முடிஞ்சது மாதிரி நினைக்கிறவர்கள். ஆனா உண்மை என்னன்னா, யாரையும் நாம கெஞ்சிக் கிடைக்க வேண்டிய அவசியமே இல்லை. பேச விரும்பாத ஒருத்தரிடம் தொடர்ந்து பேச முயற்சிப்பது நம்மை மட்டுமே காயப்படுத்தும். "அவர் இல்லாம நான் முடியாது" என்பது உணர்ச்சி... உண்மை இல்லை. ஒரு உறவு நம்மை உடைக்க ஆரம்பிச்சா... அது காதல் இல்லை, அது பழக்கம் மட்டும். நீங்க ஒருத்தரை இழந்துட்டீங்கன்னு நினைக்காதீங்க... உங்களை நீங்களே இழக்காதீங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+