நெகு நெகுன்னு இருக்காரே.. இவர்தான் நேகா.. ரோஜாவுக்கு வரப் போறாராம்!
சென்னை: நல்லா நெகு நெகுன்னு பார்க்க படு க்யூட்டாக கலக்கலாக இருக்கிறார் நேஹா கவுடா. இவர்தான் ரோஜா சீரியலில் புதிதாக அறிமுகமாகிறாராம். என்ன கேரக்டரில் வரப் போகிறார்னு ஒரே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வந்து மக்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது .நோயின் தாக்கம் ஒருபுறம்னா லாக்டோன் போட்டு எல்லாரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறது மற்றொரு கொடுமை.
வேலை வெட்டி இல்லை, பொழுது போக்குகளும் இல்லை. பிசி லைஃப்ல எல்லாரும் ஓடிக்கிட்டு இருந்த டைம் போய் இப்போ ஆற அமர வீட்டில் உட்கார வைத்து விட்டது. உட்கார்ந்து இருந்தாலும் பரவாயில்லை பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சியில் சீரியல்கள் கூட இல்லை.

புது சீரியல்கள்
ஏற்கனவே பல தடவை பார்த்த சினிமாக்களையும், பழைய சீரியல் எபிசோடுகளையும்தான் போட்டு கடுப்படிச்சிட்டிருக்காங்க. ஆனால் இப்போ சீரியல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக நேற்று முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அதன்படி ஒருபுறம் சீரியல் படப்பிடிப்புகள் களைகட்ட ஆரம்பிச்சாச்சு .இன்னொருபுறம் இவ்வளவு நாளா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் சிலர் சீரியலை விட்டு நின்று விட்டதாகவும் செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது.

ஆட்கள் மாறுகிறார்கள்
அதனால் அவர்களுக்குப் பதில் வேறு புதுமுகங்களைக் களமிறக்கி இனி அவருக்குப் பதில் இவர்னு கார்டு போடத் தயாராகி வருகிறார்களாம் இயக்குநர்கள். அதில் ஒன்றாக, நம்ம ரோஜா சீரியல்ல ஒரு புதுமுகம் வரப்போறாங்க. அதுதான் இந்த நேகா கவுடா. அப்பத்தான் சுட்டெடுத்த நெய் தோசை மாதிரி மொழுமொழுன்னு அவ்வளவு அழகா இருக்காங்க நேகா கவுடா. அவங்க என்ன கேரக்டரில் வரும் என்பதுதான் சஸ்பென்ஸ்.

நெகு நெகு நேகா
நேகா கவுடா சீரியலுக்குப் புதுசில்லைங்க. இதுக்கு முன்ன கல்யாணப்பரிசு என்கிற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு வெயிட்டான ரோல் கிடைக்கலை. இந்த நிலையில்தான் ரோஜாவில் இவர் தலை காட்டப் போறாராம். ஆனால் என்ன கேரக்டர் என்று ரசிகர்கள் தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

காயத்ரி நேகா
கல்யாணப்பரிசு சீரியலில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் நேகா கவுடா. இவர் பெங்களூரு பொண்ணு. அதனாலதான் தளதளனு தக்காளி போல இருக்கிறாரோ என்னவோ. இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இதுபோக நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கார். நேகாவுக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸில் தான் விருப்பமாம் அதான் முறைப்படி வெஸ்டன் டான்ஸ் கற்று இருக்காராம்.

சிறிய வயதிலேயே
பத்தாம் வகுப்பு படிக்கும்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். படித்து முடித்த பிறகுதான் சினிமாவில் நுழையணும்னு அவங்க வீட்டில சொல்லிட்டாங்களாம். அதனால பிகாம் முடிச்ச பிறகுதான் நடிக்க ஆரம்பித்தாராம். 2013ல் முதலில் கன்னட சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகுதான் கல்யாண பரிசு சீரியல் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆரம்பத்தில் அவருக்கு நடிப்பதற்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சாம்.

தமிழ் தெரியாத கன்னடக் கிளி
நேகாவுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கூட தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் கல்யாணப்பரிசு சீரியல் டீம் இவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அதனால ஒத்துக்கிட்டாங்களாம். இப்போ அந்த சீரியல் மூலமாக தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். இந்த சீரியல் ஒரு முக்கோணக் காதலை மையமாகக் கொண்டது. இவர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.

யோசனையில் ரசிகர்கள்
இவருடைய கேரக்டர் காயத்திரி ஆகவே இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டார் இப்போ ரோஜா சீரியலில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான் ரசிகர்கள் குழம்பி தவிக்கிறார்கள். ஒரு வேளை புது ரோஜாவாக அறிமுகமாவாரா அல்லது வில்லியாக வருவாரா அல்லது வேறு கேரக்டரா என்னவா இருக்கும் என்று எல்லோரும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டுள்ளனர். வரட்டுமே பார்த்துத் தெரிந்து கொண்டால் போகிறது.

நேகாவின் அழகு ரகசியம்
சரி நேகாவைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டோம். அவரோட கீழுதட்டுக்குக் கீழே இருக்கிற மச்சம்தான் அவரோட அழகின் ரகசியமாம். நிறையப் பேர் அதைச் சொல்லிசொல்லி புகழ்வாங்களாம். அதனால் தன்னோட மச்சத்தின் அழகு மீது நேகாவுக்கே ஒரு தனி பெருமையும் கர்வமும் உண்டாம்.. உண்மைதாங்க.. பார்க்க அப்படி ஒரு அழகை கூட்டித் தருது அந்த மச்சம்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications