2020ம் ஆண்டை ஆரம்பிச்சு வைக்கப் போறதே நம்ம சித்தப்பா நேசமணிதாய்யா!
சென்னை: 2019 வருடத்தில் சுத்தியல் போட்டு இது என்ன என்று கேட்டு ஃபிரண்ட்ஸ் படத்தின் வடிவேலு கதாபாத்திரம் நேசமணி ஹேஷ்டேக் பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.
இந்த அலை கடந்த ஓரிரு மாதங்களில் ஆரம்பித்து ஓய்ந்து முடிந்தது. இப்போது மீண்டும் அது தலையெடுக்கப் போகிறது.
இந்த வருடத்தின் முடிவில் இன்று இரவு 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கும் விதமாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஃபிரண்ட்ஸ் படத்தை ஒளிபரப்பி துவக்கி வைக்க உள்ளது சன் டிவி.

ஒருவர் சித்தப்பா
எப்போதுமே கேங்க்காக இருக்கும் ஃபிரண்ட்ஸ் கூட்டத்தில் ஒருவர் சித்தப்பா என்று எப்போதும் அழைக்கப்படுவார். இங்கு ஃபிரண்ட்ஸ் கூட்டம் இல்லை என்றாலும், காண்டிராக்டர் நேசமணியாக நடிக்கும் வடிவேலு, ரமேஷ் கண்ணாவின் சித்தப்பாவாக இருக்க அனைவரும் அவரை சித்தப்பா என்று அழைக்கின்றனர்.

விஜய் சூர்யா
நிஜத்தில் ஃபிரண்ட்ஸாக இருக்கும் விஜயும் சூர்யாவும் இணைந்து நடித்த இரண்டாவது படம் இது, முதல் படம் நேருக்கு நேர். இதில் வடிவேலு காமெடிக்குத்தான் படத்தில் முதலிடம். ராதாரவி பங்களா வெள்ளையடிக்கும் கான்டிராக்டை எடுத்துவிட்டு விஜய் சூரியாவை வேலை வாங்க தெரியாமல் டென்சன் ஆகும் வடிவேலு எல்லாரையும் சிரிக்க வைத்து இருப்பார்.

பாட்டன் பூட்டன்
கடிகாரத்தை தூக்கிட்டு போகும்போது விஜய் அந்த வீட்டு பெண்ணை சைட் அடிச்சுக்கிட்டே பிடிக்காமல் விட்டுவிட்டு பிடிக்கிலன்னு சொல்ல.. கடிகாரம் கீழே விழ.. நான் பார்த்தேன்..அவர் பிடிக்கலேன்னு சார்லி சொல்ல சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேன்னு வடிவேலு புலம்ப.. பாட்டன் பூட்டன் காலத்துலேர்ந்து பாதுகாப்பா வச்சுருந்த கடிகாரம்னு ராதாரவி கத்திகிட்டே வர.. அப்பாடி நான் கூட புதுசுன்னு நினைச்சுட்டேன்னு வடிவேலு பெருமூச்சு விட...காட்சிகள் அத்தனையும் வடிவேலுவுக்கு என்றே செதுக்கப்பட்டவை.

சித்தப்பா.. என்னம்மா..
விஜய் பாடும் பாட்டை பாதியில் நிறுத்திவிட, மாடியில் இருந்து தேவயானி சித்தப்பா என்று ராதாரவியை கூப்பிட பழக்க தோஷத்தில் என்னம்மா.. என்று வடிவேலு மாடியை நோக்கி பார்த்தவாறு கேட்க.. ராதாரவி மிரட்டியவாறே என்னம்மா என்று கேட்க இதுவும் ரசித்துப் பார்த்தால் செம காமெடி. படம் முழுக்க இப்படி வடிவேலுவை ரசித்து ரசித்து பார்த்து சிரிக்கலாம்.
சுத்தியல் காமெடி செம.. செம.. பாருங்கள்..நேசமணியை மீண்டும் ஹேஷ்டேக் ஆக்குங்கள்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications