குக் வித் கோமாளி புகழ் போட்ட அந்த வீடியோ.. மண்ட பத்ரம்.. போலீஸ் கேஸ் போட போறாங்க.. குவியும் அட்வைஸ்
சென்னை: சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என விஜய் டிவி புகழுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு எனும் காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் புகழ். இவர் அந்த நிகழ்ச்சியில் பெண் கெட்டப்பில் வந்து காமெடியில் கலக்குவார்.
இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். கோமாளியாக இவர் அடிக்கும் லூட்டியை பார்த்து அந்த நிகழ்ச்சியை பார்ப்போர் வயிறு குலுங்க சிரிப்பார்கள்.

சின்னத்திரை
இந்த நிலையில் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கும் சென்றார். வைபவ் நடித்த சிக்ஸர் மூலம் படங்களில் அறிமுகமானார். அதன் பிறகு சந்தானம் நடித்த சபாபதி, என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்த புகழ் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்திருந்தார்.

அருண் விஜய்
பின்னர் அருண் விஜய்யின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி 46, ஏஜென்ட் கண்ணாயிரம், குதூகலம், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr Zoo Keeper) என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்கள்
இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார். அண்மையில்தான் இவர் தான் காதலித்த பென்சியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் தற்போது ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புகழ் யமகா பைக்கில் மங்கு குல்லா, முகமூடி அணிந்து புகழ் பயணிக்கிறார்.

டிரேட் மார்க்
இடையிடையே ரசிகர்களுக்கு அவரது டிரேட் மார்க் முத்தத்தை பாஸ் செய்கிறார். ஒரு கட்டத்தில் குல்லாவை எடுக்கிறார், பின்னர் முகமூடியையும் எடுத்து தனது முகத்தை காட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதாவது ஹெல்மெட் அணியாமல் புகழ் ஓட்டுகிறார். மேலும் அவ்வப்போது கையை எடுத்துவிட்டு ஓட்டுகிறார்.

அறிவுரை
பொதுவாக பிரபலங்கள்தான் இளைஞர்களுக்கு முன்னுதாரணம். ஆனால் புகழின் வீடியோவை பார்க்கும் பல இளைஞர்கள் அவரை பார்த்து ஹெல்மெட் ஓட்டாமல் வாகனங்களை இயக்கினால் என்னாவது என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாகும். அதனால் கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் இருங்கள் என புகழுக்கு பலர் அறிவுரை கூறி வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்றும் அவ்வாறு ஓட்டினால் அதன் மூலம் ஏற்படும் விபத்துகளால் எத்தனையோ பேர் மூளைச்சாவு அடைந்தும் உயிரிழந்தும் விடும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஹெல்மெட் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கடுமையாக போராடி வரும் இந்த சூழலில் புகழை போல் புகழின் உச்சியில் இருக்கும் பிரபலங்கள் தனது செயல்பாடுகளால் யாரையும் தவறாக வழிநடத்திவிட கூடாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications