வருஷத்திற்கு ஒன்னு எங்க இருந்துதான் வருதோ!.. வருந்திய மணி! வாழ்க்கைன்னா அப்படித்தான்! நெட்டிசன்கள்
சென்னை: விஜே மணிமேகலையின் இரு சக்கர வாகனம் திருட்டு போன சம்பவம் குறித்து உருக்கமாக மணிமேகலை பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜே மணிமேகலை- குக் வித் கோமாளியில் கலக்கி வருகிறார். காமெடி ராணி என சொல்லும் அளவுக்கு அவரது காமெடி அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அவரது உடல் மொழி, முக பாவனை என அனைத்தும் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

யூடியூப் சேனல்
தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மணிமேகலைக்கு சமூகவலைதளங்களில் நிறைய பாலோயர்கள் உள்ளனர். மகிழ்ச்சி, துக்கம், காமெடி, என எதுவாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் மணிமேகலை பகிர்ந்து கொள்வார். இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போட்ட ஒரு பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.

பைக் திருட்டு
அவர் தனது பதிவில், அசோக் நகரில் நண்பர் வீட்டுக்கு சென்ற போது எங்களது பைக் திருடு போய்விட்டது. கல்யாணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்து ஆசையா வாங்குன எங்களது முதல் பைக். மிகவும் வருத்தமாக இருக்கிறது. வருஷத்திற்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ. போலீஸில் புகார் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

பிரார்த்தனை
மேலும் தங்களது வாகன எண்ணையும் வண்டியையும் புகைப்படம் எடுத்தும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். மணிமேகலையின் இந்த சோகத்திற்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். "கவலைப்படாதீர்கள், நான் உங்களது மிகப் பெரிய விசிறி. போலீஸில் புகார் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா, நிச்சயம் கண்டுபிடித்து தருவார்கள். நான் பிரார்த்திக்கிறேன் என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும்
சாதாரண பைக்குதானே, கவலைப்படாதே மகளே, உங்களுக்கு அந்த பைக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்க்கையில் எப்போதும் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். அதை நீ ஜீரணிக்கத்தான் வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.

தவறை உணருவார்
உங்கள் பைக்கை எடுத்துச் சென்றவர் நிச்சயம் தனது தவற்றை உணர்ந்து உங்களிடம் திரும்ப கொடுத்துவிடுவார் என்கிறார் இந்த வலைஞர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications