ஏய் இந்தாம்மா ஜனனி.. 40 % சொத்து போச்சேனு கவலை இல்ல! உனக்கு இந்த டிரஸ் கேக்குதோ? நெட்டிசன்கள் கலாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் நாயகி ஜனனியை ஆதி குணசேகரன் ஸ்டைலில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதுக்கெல்லாமா கலாய்ப்பீங்க?

எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் வகித்து வருகிறது. இந்த சீரியலை விஜய்யின் தாய் ஷோபா, இலக்கியவாதி சுப வீரபாண்டியன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பார்க்கிறார்கள்.

Netisans jovial comment on Ethirneechal Janani for her cute dress

இந்த சீரியலில் தினந்தோறும் விறுவிறுப்பான காட்சிகளை இயக்குநர் திருச்செல்வம் வைத்துள்ளதால் இதன் மீதுள்ள விறுவிறுப்பு ரசிகர்களுக்கு குறையாமல் உள்ளது. இந்த சீரியிலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகிய 3 மருமகள்கள்.

இவர்களது கணவர்களும் இவர்கள் படித்திருந்தாலும் சிறிதும் மரியாதை கொடுக்காமல் அவர்களை மிக மோசமாக நடத்துவார்கள். 4ஆவது தம்பி சக்தியின் மனைவி ஜனனி இதை தட்டிக் கேட்பார். அப்போது சில பிரச்சினைகள் வரும். பிறகு சக்தியும் ஜனனியும் பிரிவர். பிறகு அப்பத்தாவின் முயற்சியால் ஒன்று சேர்வர்.

Netisans jovial comment on Ethirneechal Janani for her cute dress

இந்த நிலையில் ஆதி குணசேகரன் தனது தங்கை ஆதிரைக்கு பிடிக்காத வரனை பார்ப்பார். ஆனால் ஆதிரையோ அருணை விரும்புவார். அவருடன் ஆதிரையை சேர்த்து வைக்க 4 அண்ணிகளும் போராடுவார்கள். இந்த சம்பவத்தில் திடீர் டிவிஸ்ட்டாக ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாய கல்யாணத்தை ஆதி குணசேகரன் நடத்தி விடுகிறார்.

அதன் பிறகு இந்த சீரியலில் என்னென்ன நடக்கிறது என்பது தினமும் விறுவிறுப்பாக போகிறது. முற்றிலும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து பெண்களின் பேவரைட்டாக இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் மதுமிதா அண்மையில் கார் வாங்கியுள்ளார்.

Netisans jovial comment on Ethirneechal Janani for her cute dress

இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மாடர்ன் உடை அணிந்து கொண்டு கியூட்டாக இருக்கும் வீடியோ (இந்த வீடியோ மதுமிதாவின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது) ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அழகாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். சீரியலில் கிராமத்து பெண் போலவும் நிஜத்தில் பட்டினத்து பெண் போன்று அட்டகாசமாக இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கமென்ட் போட்டு வருகிறார்கள்.

மாடர்ன் டிரஸ் போடும் கேரக்டர்களில் நடியுங்கள் என அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மேலும் நெட்டிசன் ஒருவர் ஏம்மா குணசேகரன் பார்த்தால் "இந்தாம்மா ஏய் 40 சதவீதம் சொத்து போச்சுன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இந்த மாதிரி டிரஸ் போட்டிட்டு சுத்துறியேனு திட்ட போறாரு என்கிறார்கள். இந்த சீரியலில் ஆதி குணசேகரனுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+