"பிறப்பால் அனைவரும் சமம்" நீயா நானாவில் ஆண்ட பரம்பரை சாதிப் பெருமை பேசி டிரெண்டானவரின் மாற்றம்!
சென்னை: 2020ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சாதி பெருமை பேசும் இளைஞர்கள் மற்றும் அதனை எதிர்க்கும் படித்த கிராமத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தினகரன் என்ற இளைஞர், சின்ன வயசுல இருந்தே எங்கள் இரத்தத்தில் சாதி ஊறி இருக்கிறது. என் கண்ணில் ஒரு திமிர், வீரமா ராஜ பரம்பரையில் இருந்து வந்தவர்கள்.
அப்படிதான் வீரமாக வாழ்ந்து வருகிறோம். அதேபோல் பேசும் போதும் சரி, நடை, உடை, பாவனை என்று அனைத்தும் ராஜ பரம்பரையில் இருந்து வந்தவர்களை போல் செய்வோம். ராஜ பரம்பரை எப்படி நடப்பார்களோ, அப்படிதான் நடப்போம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ராஜ பரம்பரை நடை எப்படி நடப்பது என்றும் காட்டினார். மீசை வளர்ந்தால் இன்னும் கம்பீரமாக இருக்கும் என்று பேசி இருந்தார்.

உலக தமிழர்கள் மத்தியில் அதிகமாக டிரெண்டிங்கான வீடியோக்களில் இதுவும் ஒன்றாகும். ஏனென்றால் இளைஞர்கள் மத்தியில் சாதி எப்படி போலி பிம்பங்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டமாக அவரின் செயல்பாடுகள் அமைந்தது. இந்த நிலையில் இன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் மீடியா மற்றும் செய்தி சேனல்களின் செயல்பாடுகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் மீண்டும் சாதிப் பெருமை பேசிய இளைஞரான தினகரன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தினகரன் பேசுகையில், அந்த வயதில் சாதி பெருமையை பற்றி பேசிக் கொண்டு இன்னும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அப்படியான எண்ணங்களில் இருந்தும், சிந்தனைகளில் இருந்தும் வெளியில் வந்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார்.
அதற்கு சுற்றி இருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினர். தொடர்ந்து அவர் பேசுகையில், இப்போதெல்லாம் எந்த சாதியை பற்றியும், சாதிப் பெருமையை பற்றியும் பேசுவதில்லை. எனது பணியை மட்டுமே செய்து வருகிறேன். இதற்கு முன்பாக பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியில், என்னிடம் ஒரு அக்கா, தங்கம் இதுலாம் தப்பு தங்கம் என்று சொன்னாங்க.. அந்த அக்காவின் பெயர் கூட தமிழ்ச் செலவி என்று நினைக்கிறேன்.
அந்த அக்கா எவ்வளவோ சொன்னார்கள்.. நான்தான் புரிந்து கொள்ளவில்லை. என்னை பொறுத்தவரை அனைவரும்.. பிறப்பால் அனைவரும் சமம்.. என்று கூறுயுள்ளார். இதனை விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீயா நானாவில் தினகரன் பேசிய இரு வீடியோக்களையும் ஒப்பிட்டு, மாற்றம் நடந்து வருவதாக சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications