OTT App: இனிமே இப்படித்தான்... அமேசான் பிரைம் வீடியோவில் பொன்மகள் வந்தாள்!
சென்னை: மக்களே இனி இப்படித்தான் என்பது போல முதலில் விவேக் நடிப்பில் வெளியான தாராள பிரபு படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.இப்போது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக அமேசானில் வெளியாகவுள்ளது.
கோவிட் தொற்று லாக்டவுன் யாருக்கு நன்மையோ யாருக்கு கெடுதலோ...ஆனால், ஓடிடி தளங்களுக்கு லக்கி பிரைஸ்தாங்க....லாக்டவுன் நேரத்தில் படங்களை நேரடியாக இவர்களுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள்.
விவேக் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு படம் ஒரு வாரம் தியேட்டரில் வெளியாகி ஓடிய நிலையில், லாக்டவுன் அமலுக்கு வந்தது. தயாரிப்பாளர் இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவுக்கு விலை பேசி கொடுத்து விட்டார். அமேசான் பிரைம் வீடியோவில் இந்த திரைப்படத்தை பலரும் பார்த்தனர்.

கமல்...இனிமேல் இப்படித்தான்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தை டிஷ் டிவி சானல்களுக்கு விலை உரிமம் பேசினார். அப்போது திரையரங்கு உரிமையாளர்கள் கமல் மீது செம கோபத்தில் இருந்தார்கள். கமலின் விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று கூட சொன்னார்கள். கமல் அப்போது இனிமேல் இப்படித்தான் என்று சொன்னதை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்கவில்லை.

அப்படித்தான் ஆனது
கமல் அப்போதே இனிமேல் இப்படித்தான் என்று சொன்னது போல அப்படித்தான் ஆனது இன்றைய சினிமாக்களின் நிலை. படங்களை எடுத்து ரிலீசுக்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள், அதை அப்படியே வைத்து இருந்தால் எதற்கும் பிரயோஜனப்படாது என்று ஓடிடி இயங்கு தளங்களுக்கு படங்களை விலை பேசத் துவங்கி உள்ளனர்.

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள் திரைப்படம், திரையில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக லாக்டவுன் அமலுக்கு வந்தது. திரையரங்குகள் செயல்படவில்லை...லாக்டவுன் முடிந்தாலும் திரை அரங்குகள் விரைவில் செயல்படுமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

நஷ்டத்தை சரிக்கட்ட
எனவே, நஷ்டத்தை சரி செய்ய பொன்மகள் வந்தாள் தயாரிப்பு தரப்பு, படத்தை அமேசான் பிரைம் வீடியோவுக்கு விலை பேசி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நஷ்டம் வராதபடி படம் விலை போயிருப்பதால், இந்த படத்தை எப்போதும் திரையில் பார்க்க முடியாது. ஒன்லி அமேசான் பிரேம் வீடியோவில் கண்டு களிக்கலாம்.
மக்களே இனிமேல் இப்படித்தான்...!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications