ஏய்.. குட்டை...என்ன நெட்டை.. காதலர்களின் செல்ல பேரு.. புது காதல் உருவாகுது!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் லண்டனில் படிச்சுட்டு வந்தவன் தேவியின் தம்பி துரை.
அக்கா புருஷன் மாயன் படிக்காதவன், ரவுடின்னு மாயனை லண்டன்காரனுக்கு பிடிக்கலை. எப்போ பார்த்தாலும் மாயனை அவமதிச்சுக்கிட்டே இருக்கான்.

இப்படி படிக்காதவ, விவரம் தெரியாதவள் எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன். லண்டன் பொண்ணுதான் எனக்கு பொண்டாட்டியா வருவான்னு வீட்டுல சொல்லிக்கிட்டு இருக்கறவன்.
இந்த சமயத்துலதான் மாயனோட தங்கச்சி சைக்கிள் ஒட்டிக்கிட்டு போயிகிட்டு இருக்கா.அவ மாயன் தங்கச்சிதான்னு துரைக்கு தெரியாது. அவ சைக்கிளில் தெரியாம காரை மோதிடறான் துரை. மாயன் தங்கச்சி கண்ணாபின்னானு திட்ட.. ஏய் குட்டைன்னு சொல்றான்.

சொல்லுடா நெட்டைன்னு சொல்றா அவ..உனக்கு புது சைக்கிள் வாங்கித் தரேன் வான்னு புதுசா சைக்கிள் வாங்கித் தர்றான். அதன் பின் கோயிலில் அவளை சந்திக்கறான்.
பணக்கார பசங்க சும்மா இருக்க மாட்டீங்களா..வஞ்சனை இல்லாம வளர்ந்து நிக்கறியே நெட்டை..ஏண்டா என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றியான்னு கேட்கறா.

ஒரு தடவைத்தாங்க உங்களை குட்டைன்னு கூப்பிட்டேன். பதிலுக்கு நெட்டை நெட்டைன்னு ஓட்டறீங்க..நிஜமா கோயிலுக்குத்தான் வந்தேன். அம்மா நேர்த்தி கடன்னு சொன்னாங்கன்னு சொல்றான்.
இன்னொரு நாள் வழியில் இவன் கார் ரிப்பேராகி நின்னு போகுது. இப்போதான் சைக்கிள் செயின் கழண்டு போச்சுன்னு, லிஃப்ட் தரேன்னு சொன்னே . அதுக்குள்ளே உன் கார் ரிப்பேரா..சரி சரி வா என் சைக்கிளில் உனக்கு லிஃப்ட் தரேன்னு சொல்றா.

அவன் பின்னாடி நிக்க, என்ன நெட்டை உன்னை வச்சு நான் எப்படி ஓட்ட முடியும், உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமான்னு கேட்கறா. என்னங்க இப்படி ஓட்டறீங்க..கலாய்க்காதீங்க..நீங்க உட்காருங்க.. நான் ஓட்டறேன்னு அவளை சைக்கிளில் அழைச்சுக்கிட்டு போறான்.
ஒரு புது காதல் உருவாகுது...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications