பார்த்துக்கோங்க... OTT தளத்தில் இனி படமும் ரிலீசாகும் மக்களே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமேசான் ப்ரைம் வீடியோவில் தாராள பிரபு தமிழ் படம் நாளை ரிலீசாகிறது மக்களே.. வீட்டில் இருந்து கண்டு களிக்கலாம். இந்த படத்தில் நடிகர் விவேக், ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் பெரும் ஹிட் அடித்த திரைப்படம் விக்கி டோனர்'. இதன் தமிழ் ரீம்மேக்கான தாராள பிரபு திரைப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி இருக்கிறார்.

விந்தணு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக டான்யா ஹோப் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சின்ன கலைவாணர் விவேக் நடித்துள்ளார்.

 ஏற்கனவே வந்தாச்சு

ஏற்கனவே வந்தாச்சு

தாராள பிரபு படம் மார்ச் 13-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானதுதான். அப்போது வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான விமர்சங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், கொரோனா வைரஸின் பரவல் காரணமாக படம் வெகுநாட்கள் தியேட்டர்களில் ஓட முடியாமல் போனது.

 நோ மால்கள்

நோ மால்கள்

கோவிட் 19 தொற்று அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் லாக்டவுன்...திரையரங்குகள், மால் உட்படக் கூட்டம் சேரும் அனைத்து பொது வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பல படங்களுக்கு இழப்பு ஏற்பட்டதில் தாராள பிரபு திரைப்படம் விதிவிலக்கா என்ன? என்றாலும் படக்குழு இப்படத்தை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு மறு வெளியீடு செய்யலாம் என்று திட்டமிட்டது.

 நிலைமை கட்டுக்குள் இல்லை

நிலைமை கட்டுக்குள் இல்லை

ஆனால், தற்போதைய நிலைமையும் கட்டுக்குள் இல்லை என்பதால், படக்குழு நல்ல தரமான முடிவை எடுத்து இருக்கிறது. அதன் படி தாராள பிரபு படத்தை OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த மாதம் 9-ஆம் தேதி அதாவது நாளை வியாழக்கிழமை வெளியிட முடிவு செய்துள்ளது.

 நல்ல முடிவு

நல்ல முடிவு

படக்குழு இந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்து சூட்டோடு சூடாக OTT தளத்தில் படத்தை வெளியீடு செய்ய முன்வந்தது என்பது திரைப்படத் துறையினருக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை இனி வரும் காலங்களில் இப்படியான மாற்றங்களை சந்திக்கும் காலமாகவே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+