Ramayanam Serial: டிடி நேஷனல் ராமாயணம் ஒளிபரப்பில் குவாலிட்டி எங்கே?
நியூடெல்லி: டிடி நேஷனல் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒளிபரப்பி வரும் ராமாயணம் தொடரில் முந்தைய ஒளிபரப்பின் போது இருந்த குவாலிட்டி இப்போது இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் தூர்தர்ஷன் அதாவது டிடி நேஷனல் ராமாயணம் தொடரை மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கியது. இந்தியா முழுவதுமான மக்கள் ராமாயணத்தை ஆவலுடன் பரக்கத் துவங்கினர்.
இதனால் அதிகம் பார்வையாளர்கள் இல்லாமல் இருந்த டிடி நேஷனல் டாப் டென்னில் இடம்பிடித்தது என்றும், வியூவர்ஸ் பன்மடங்காக பெருகினர் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.இந்த நேரத்தில்தான் மேற்கண்ட குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரிஜினல் இல்லையா
டிடி நேஷனலில் ராமாயணம் பார்க்கும்போது, அப்போதைய காலக்கட்டங்களில் பார்த்த குவாலிட்டி இல்லை என்றும், மோஸர் பியர் கம்பெனியின் ராமாயணம் டிவிடியைத்தான் நீங்கள் ஒளிபரப்புகிறீர்கள் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது என்று தூர்தர்ஷன் ட்வீட்டர் வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
|
எதில் பார்க்கிறீர்கள்
நீங்கள் எந்த இணைப்பில் பார்க்கிறீர்கள்... உங்கள் இணைப்பு சரியாக இருக்கிறதா என்று சரிப்பார்க்கவும் என்றெல்லாம் டிடி ட்வீட்டர் தளத்தில் சிஇஓ சார்பாக பதில் அளிக்கப்பட்டு இருந்தாலும். ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. உங்களிடம் ஒரிஜினல் இல்லை...தயவு ஒரிஜினல் வாங்கி ஒளிபரப்பு செய்யவும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பக்க வாத்தியங்கள்
ராமாயணம் ஒளிபரப்பாகும்போது உரையாடலை கேட்க முடிவதில்லை. உரையாடலை விட பக்க வாத்தியங்கள் அதாவது இசை முன்னுக்கு நின்று அதிகமாக ஒலிக்கின்றன. இதை சரி செய்யக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.ராமாயணம் ரசிகர்களின் ஆசைப்படி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை என்பதே உண்மை.
|
முதன் முதலில் ராமாயணம்
முதன் முதலில் டிடி நேஷனலில் தயாரித்து எடுக்கப்பட்ட இந்த ராமாயணம் தொடருக்குத்தான் இன்றுவரை மவுசு இருந்து வருகிறது. ஏகப்பட்ட பொருட்செலவில், நிறைய நட்சத்திரங்களோடு எடுக்கப்பட்ட இந்த ராமாயணத்தை ரசிகர்கள் திருப்தி படும்படி குவாலிட்டியாக ஒளிபரப்ப வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications