திங்கள் கிழமை சன் டிவியில "கிழக்கு வாசல்".. இது படமில்லைங்க, சீரியல்!
சென்னை: சன் டிவியில் வரும் திங்கள் முதல் காலை 10:30 மணிக்கு கிழக்கு வாசல். இது கார்த்திக் குஷ்பூ நடிச்ச கிழக்கு வாசல் இல்லைங்க.. சீரியல் பேரு கிழக்கு வாசல்.
இப்போது தினமும் அந்த நேரத்தில் குஷ்பூ தயாரிப்பு நிறுவனம் சன் டிவியோடு இணைந்து தயாரித்த நந்தினி சீரியல் இரண்டாவது முறையா ஒளிபரப்பாகிட்டு வருது. அந்த நேரத்துல இப்போ வரும் திங்கள் முதல் கிழக்கு வாசல்னு ஒரு புதிய சீரியல் வரப்போகுது.

குஷ்பூ, ரேவதி, கார்த்திக் நடிச்சு சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் கிழக்கு வாசல். இந்த சென்டிமென்டை கையில் எடுத்து சீரியலுக்கு இந்த பெயரை வைத்துள்ளார்களோ என்னவோ என்று பேச்சு அடிபடுகிறது.
இப்போது குஷ்பூ நடிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ரேட்டிங் பிடித்து, 9:30 மணி நேர ஸ்லாட்டை கூப்பிட்டு குடுக்கற மாதிரி நடந்துகிட்டு இருக்கு குஷ்பூ தயாரிப்பு நிறுவனம்.
இந்த சீரியலில் இப்போதைக்கு நிழல்கள் ரவி, நடிகர் ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சன் டிவியின் பகல் நேர சீரியல்களில் முதலிடத்தில் இருப்பது நிலா சீரியல்தான். அடுத்த இடத்தில் கல்யாண பரிசு சீரியல் இருக்கும் நிலையில் கிழக்கு வாசல் இதே இடத்தில் இருக்குமா, இல்லை தாவித்தாவி நல்ல இடத்தைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஜெய் அனுமான், விநாயகர், ஷீரடி சாய் பாபா போன்ற சீரியல்களுக்கு பிறகான நேரம் கிழக்கு வாசல் சீரியலுக்கு ஒதுக்கி இருப்பதால், பலரும் இந்த சீரியலை விரும்பிப் பார்ப்பார்கள் என்றே சன் டிவி கணித்துள்ளது.
இருந்தாலும் பாருங்க.. சன் டிவியும் விஜய் டிவி மாதிரி சினிமா பெயர்களை சீரியலுக்கு சூட்ட ஆரம்பிச்சுட்டாங்கங்கோ...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications