OTT This Week: வீர தீர சூரன், எம்புரான்.. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் விருந்து
சென்னை: இந்த வாரம் (ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27, 2025 வரை) பல முக்கிய தென் மாநில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் இருந்து ரசிகர்களைக் கவரும் பல படைப்புகள் இந்த வாரம் வரவுள்ளன. அவற்றின் விவரம் இங்கே:
எல்2: எம்புரான் (L2: Empuraan)
- மொழி: மலையாளம்
- ஓடிடி தளம்: ஜியோ சினிமா (JioCinema)
- வெளியாகும் தேதி: ஏப்ரல் 24, 2025

மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள 'எம்புரான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. 2019ல் வெளியான 'லூசிஃபர்' படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. பாஜக தரப்பினர் எதிர்ப்பால் படத்தில் பல இடங்களில் கட் செய்ய வேண்டிய நிலை வந்தது. மோகன்லால் இதில் குரேஷி அப்'ராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
வீர தீர சூரன் பகுதி 2 (Veera Dheera Sooran Part 2)
- மொழி: தமிழ்
- ஓடிடி தளம்: பிரைம் வீடியோ (Prime Video)
- வெளியாகும் தேதி: ஏப்ரல் 24, 2025

சியான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் பகுதி 2' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஒரு மளிகைக் கடை உரிமையாளராக இருக்கும் காளி, ஒரு காலத்தில் அடியாட்களுடன் பணிபுரிந்தவர். காவல்துறை அதிகாரி தன்னையும் தன் மகனையும் குறிவைக்கும்போது, முக்கிய பிரமுகரான ரவி, காளியின் உதவியை நாடுகிறார். விக்ரம் காளியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இது ஒரு யதார்த்தமான ஆக்சன் படம்.
அய்யன மனே (Ayyana Mane)
- மொழி: கன்னடம்
- ஓடிடி தளம்: ஜீ5 (ZEE5), ஓடிடிப்ளே பிரீமியம் (OTTplay Premium)
- வெளியாகும் தேதி: ஏப்ரல் 25, 2025

ஜீ5 தளத்தின் முதல் கன்னட ஒரிஜினல் வெப் சீரிஸ் இது. 1990களில் நடக்கும் கதை. புதிதாகத் திருமணமான ஜாஜி, தன் கணவன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு குடும்பத்தில் நடந்த மரணங்கள் தொடர்பான ரகசியங்களை அவர் கண்டுபிடிக்கிறார். ரமேஷ் இந்திரா இதை எழுதி இயக்கியுள்ளார். மொத்தம் 6 பாகங்கள் கொண்ட இந்த சீரிஸ் மர்மம் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொத்த கொத்தகா (Kotha Kothaga)
- மொழி: தெலுங்கு
- ஓடிடி தளம்: இடிவி வின் (ETV Win), ஓடிடிப்ளே பிரீமியம் (OTTplay Premium)
- வெளியாகும் தேதி: ஏப்ரல் 24, 2025

2022 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான தெலுங்குப் படமான 'கொத்த கொத்தகா', இப்போது ஓடிடியில் வெளியாகிறது. அஜய் அமன் மற்றும் விரிதி வக்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களான சித்து மற்றும் ராஜீவின் வாழ்க்கையைச் சொல்கிறது. திரையரங்குகளில் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்தப் படம், ஓடிடியில் வெளியாகிறது.












Click it and Unblock the Notifications