கவர்ச்சி ரவிக்கை.. பெரிய பெரிய பாம்பு.. அட இப்ப டிரெண்டு கடை வைப்பதுதான்
சென்னை: பேய் படம் ஹிட்டாயிருச்சுன்னு வைங்க, அடுத்தடுத்து பேய் படமாவே வரும்.இந்த ஃபார்முலாவைத்தான் சின்னத்திரையிலும் கடைபிடிக்கிறார்கள்.
குடும்ப சீரியல்களாகதான் நம்ம டிவிக்களில் வந்துகிட்டு இருந்துச்சு. பாவம் கதாநாயகி எப்பவும் கண்ணீர்ரும் கம்பலையுமாத்தான் இருப்பாங்க.
கோலங்கள் சீரியலில் தேவயானிக்கு கிளிசரின் வாங்கவே பெரிய தொகை செலவாச்சாம்....

இந்தி சீரியல்
நாகினி பிரபலமான இந்தி சீரியல். இதில் ஷிவானியாக வரும் கதையின் நாயகி, இச்சாதாரி பாம்பாம். மனித உருவம் எடுப்பதும், பாம்பாக மாறுவதும் என்று பார்ப்பவர்களை குஷிப்படுத்தும் ஒரு அவதாரம்.

படு கவர்ச்சி
ஷிவானி ரவிக்கை, கை இல்லாத ரவிக்கைன்னு கூட சொல்ல முடியாது. அழகா வடிவமைச்ச உள்ளாடைன்னு சொல்லலாம். அப்படி ஒரு படு கவர்ச்சியான ரவிக்கை. இதை பார்த்தாங்க நம்மாளுங்க. உடனே பாம்பை வச்சு பல சீரியல். இதுல அண்மையில் முடிஞ்ச நந்தினி ஒரு பெரிய உதாரணம். அது மட்டுமா, எல்லா சீரியல்களிலும் பெண்கள் படு கவர்ச்சியா ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாங்க.

ரவிக்கையும் நோ..
இப்போ பாம்பும் கவர்ச்சி ரவிக்கையும் டிரண்டுல இல்லையாம். விஜய் டிவில பாண்டியன் ஸ்டோர்ஸ்னு ஆரம்பிச்சாங்க. சன் டிவியில லட்சுமி ஸ்டோர்ஸாம். இதுல குஷ்பூ நடிக்கறாங்க. அதுல மளிகைக் கடை, இதுல ஜவுளிக் கடை. மிக விரைவில் இன்னொரு டிவியில அரிசி மண்டியை மையமா வச்சு ஒரு தொடர் வர போகுதாம்.

பிழைக்கும் வழி!
மளிகைக் கடை வைத்தும், ஜவுளிக்கடை வைத்தும், அரிசி மண்டி வைத்தும் பிழைப்பு நடத்தலாம், வாழ நினைத்தால் வாழலாம் என்கிற நம்பிக்கையைத் தருவதாகத்தானே இருக்கிறது!. நல்லா கடை திறக்கட்டும்.. ரசிக்க மக்கள் ரெடியாத்தானே இருக்காங்க.. ஆனால் அரைச்ச பருப்பையே அரைக்காதீங்கப்பா.. புண்ணியமாப் போகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications