புத்தாண்டுக்கு புதுமையாய் முயற்சி எடுத்த ஆரி...இது வேற லெவல் தலைவா..கொண்டாடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தினத்தில் ஆரி வித்தியாசமான ஒரு முயற்சியை எடுத்துள்ளார்.

தன்னுடைய மகளுடன் அவர் எடுத்த முயற்சியை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.

ஆரியின் புது முயற்சி

ஆரியின் புது முயற்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ஆரி தற்போது சமூக வலைத்தளத்தில் அவருடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். யாரும் எடுக்காத புது முயற்சியாக தன்னுடைய மகளுடன் அவர் எடுத்திருக்கும் முயற்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். டிவியில் மட்டும் தான் ஹீரோ என்று அல்ல, நிஜத்திலும் ஹீரோ தான் ஆரி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால்தான் இவர் எப்போதும் போலவே இயல்பாக நடந்து கொள்கிறார் என்று ரசிகர்கள் வருடத்தின் முதல் நாளில் ஆரிக்கு ஆராதனை செய்து வருகிறார்கள்.

அழகான பொறுமைதான்

அழகான பொறுமைதான்

ஆங்கிலப் புத்தாண்டான இன்று புதுவருடத்தில் புதுமையான பல முயற்சிகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பது போலவே ஆரியும் தன்னுடைய மகளுக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய உறவினர்களிடமும், ரசிகர்களிடமும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் முறையை எளிமையாக திக்கித் திக்கிப் பேசும் தன்னுடைய மழலை செல்வத்திற்கு தெவிட்டாமல் பொறுமையாக வாழ்த்துக்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் பலர் இதே முயற்சியை நாங்களும் எடுக்க இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

குறையாத புகழ்

குறையாத புகழ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி ஹீரோவாக தற்போது வரைக்கும் ரசிகர்கள் பலருடைய மனதில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆரி திரைப்படங்களில் நடித்து வாங்காத பெயரை கூட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக வாங்கிவிட்டார். தொடர்ந்து எத்தனை சோதனைகள் வந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று பலர் கூறி வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஐந்தாவது சீசனில் கூட பல இடங்களில் ஆவியை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறனர். இதிலிருந்து இவருடைய கேரக்டர் ரசிகர்களை எவ்வளவு ஈர்த்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த சிரிப்புக்கு ஈடு இல்லை

அந்த சிரிப்புக்கு ஈடு இல்லை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மட்டுமல்லாமல் நாட்டு விதைகளை பாதுகாப்பதிலும், தமிழ் மொழியை பற்றி விரிவு படுத்துவதிலும் இவருடைய தனித்தன்மை இருக்கும் நிலையில் தன்னுடைய மகளுக்கும் தான் சிறந்த தந்தை என்று நிரூபித்திருக்கிறார். தன்னுடைய ரசிகர்களுக்காக இவர் வாழ்த்து சொல்லும் போது அவரும் அவருடைய மகளும் சிரித்த அந்த அழகான சிரிப்பு பலருடைய கண்ணுக்குள்ளே நிற்கிறது என்று இவர்களுக்கும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+