"அய்யோ பாம்பு".. அட யாரு நம்ம அனிதா சம்பத்தா இது? சீரியலில் நடிக்கிறாங்களா?
சென்னை: செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தற்போது கலர்ஸ் டெலிவிஷனில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்கள் வரும் வரை நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர் என எந்த மொழியாக இருந்தாலும் அவர்களுக்கு மட்டுமே வரவேற்பு இருந்து வந்தது. இதை தாண்டி இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளின் வித்தகர்களுக்கும் அந்த வரவேற்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் சமூகவலைதளங்கள் வந்த பிறகுதான் சாதாரண பாமர மக்களின் முகமும் பெரும்பாலானவர்களுக்கு தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது செய்தி வாசிப்பாளர்கள், சீரியல் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரும் புகழ் அடைந்து வருகிறார்கள்.

சன் தொலைகாட்சி
அந்த வகையில் சன் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பல லட்சம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இவர் விஜய் நடிப்பில் சர்கார் எனும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சூர்யாவின் காப்பான், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார்.

ரசிகர்கள் பட்டாளம்
இந்த நிலையில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். எனினும் அவர் தனது செயல்பாடுகளின் மூலம் ரசிகர்களின் அதிருப்தியை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தந்தையின் மரணம் அவரை உருக்குலைத்தது. இதையடுத்து இதிலிருந்து மீண்ட அனிதா, யூடியூப் சேனலை தொடங்கினார்.

நண்பர்கள்
அதில் அதிக அளவில் வீடியோ போடுவது போன்ற பணிகளில் இருந்தார். இதனிடையே சொந்தமாக கனவு இல்லத்தை கட்டி பிக்பாஸ் பிரபலங்கள், நண்பர்களை அழைத்து கிரகபிரவேசம் செய்தார். இப்படி பிஸியாக இருந்த அனிதா , விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் ஜோடி
இவர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்குடன் இணைந்து நடனம் ஆடி முதல் பரிசை வென்றார். இந்த நிலையில் தற்போது அவர் சீரியலில் நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியின் மந்திர புன்னகை எனும் சீரியலில் கதாநாயகியின் தோழியாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ப்ரோமோவில் வில்லத்தனம்
இது குறித்த ப்ரோமோவில் ஒரு வீட்டில் ஏதோ நிகழ்வு நடந்து வருகிறது. கையில் கொலுசுடன் வரும் அனிதா சம்பத், ஒரு அறை அருகே சென்று "இந்த ரூமில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கணும்" என்கிறார். மேலும் எப்படியாவது அந்த ரூமில் இருப்பதை பார்த்தே தீர வேண்டும் என நினைத்து வில்லனத்தனமாக சிரித்தபடியே பாம்பு பாம்பு என அனைவரையும் அழைக்கிறார். அப்போது கதாநாயகன் அதிர்ச்சியாக பார்க்கிறார். அப்போது அனிதா "சார் பெரிய விஷப்பாம்பு இந்த ரூம் வழியாகத்தான் போச்சு, நான் பார்த்தேன் என்கிறார். ஆனால் அந்த அறைக்கு பெரிய பாம்பு மட்டுமல்ல, சிறிய பாம்பு நுழைய கூட கேப் இல்லை. இந்த சீரியலில் இவரது பெயர் அனிதா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications