ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா! கொஞ்ச நாளைக்கு துப்பாக்கியை மறக்கலாம்!
சென்னை: கும்பிட்ட கடவுள் நம்மைக் கைவிடலை.. விஜய் டிவிக்கு புதுப் படம் கிடைச்சிருச்சு போல.. இனி துப்பாக்கி, சிறுத்தையை கொஞ்ச நாளைக்கு பார்க்காமல் இருக்கலாம்.
உலக தொலைக் காட்சிகளில் முதன் முறையாக உங்கள் விஜய் டிவியில் என்ஜிகே படம் பார்க்க நீங்க ரெடியா இருக்கீங்களா? வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த நந்த கோபாலன் குமரன் படத்தின் சுருக்கமான என்ஜிகே படத்தை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடித்துள்ள இந்த படம் அருமையான சப்ஜெட்டை சொன்னாலும், படம் எதிர்பார்த்த அளவு வெற்றி படமாக அமையவில்லை என்பதில் வருத்தம்தான்.

கையில் என்ஜிகே
விஜய் டிவி கையில் என்ஜிகே படம் கிடைத்தது ரொம்ப சந்தோஷம்தாங்க. இந்த வாரம் இந்த படத்தை பார்க்காம இருந்துட்டோம்னா கவலைப் பட வேண்டாம் பாருங்க.ஓயாம ஓயாம என்ஜிகே படத்தை விஜய் டிவியில போட்டு உலகத்துல இருக்கும் தமிழர்கள்பார்க்க மிஸ் பண்ணிய இந்த படத்தை எப்படியாவது பார்க்க வச்சுருவாங்க.

துப்பாக்கி சிறுத்தை
என்ன ஒரு சந்தோஷம்னா.. சிறுத்தை, துப்பாக்கி படத்தில் இருந்து ரொம்ம்ம்ப சீக்கிரம் விடுதலை கிடைச்சுருச்சுன்னு குதூகலிக்கலாம். என்ன, இனி அடிக்கடி கடாரம் கொண்டான், என்ஜிகே ன்னு படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.இந்த படத்தை வச்சு கலக்கப் போவது யாரு போன்ற விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் அடிக்கடி கலாய்ப்பாங்க.அதையும் பார்க்கலாம்.

செல்வராகவன் இயக்குநர்
படத்தை இயக்கியதற்காக செல்வராகவன் பெற்ற புகழை விட ,படத்தில் நடித்ததற்காக சூர்யா என்ஜிகே மூலம் அதிகம் புகழ்பெற்று விட்டார். இருந்தாலும் படம்தான் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் குவிக்கவில்லை. செல்வராகவன் கதைகளை தனது பாணி என்று ஒரு பாணியில் கொடுப்பார். இதை எல்லாராலும், எல்லா நேரத்திலும் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.

குவியட்டும் வெற்றிகள்
செல்வராகவன் ஒன்றும் ஏனோதானோ இயக்குநர் இல்லை. தனக்குள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டால் மட்டுமே அந்த படத்தை அதே விதத்தில் எடுத்தும் முடிப்பார். ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்படித்தான் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தார்.எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல். படம் பலருக்கும் பிடித்துத்தான் இருந்தது. இப்படி நல்ல இயக்குநரான செல்வராகவனுக்கு இனியும் வெற்றிகள் குவியட்டும்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications