பஞ்சு மிட்டாய்... பட்டர் பிஸ்கட்... துப்பட்டா... மாமு... ரவிப்பா... அத்தான்.. அடேங்கப்பா!
சென்னை: சன் டிவி சீரியல்களில் இப்போது காதலர்களாக நடிப்பவர்களுக்கு செல்லமா என்ன பேர் வைக்கறதுன்றதுல சீரியலுக்கு சீரியல் போட்டி நடக்குதுங்க.
காதலன் காதலியையம், காதலி காதலனையும் செல்லப் பேர் வச்சு கூப்பிடறதுதான் இப்போதைய டிரண்ட்.

முதல்ல பிரியமானவள் சீரியலில் இசை தனது அத்தை மகனை மாமு மாமுன்னு செல்லமா கூப்பிடறது கொஞ்சம்தான் செல்ல பேரு. நாயகி சீரியலில் கண்மணி செழியனை என் ஹல்க் மேன் அப்டீன்னு கூப்பிடறதும் ஒரு செல்ல பேரு.

இப்போ லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி, ரவி ரொமான்ஸ் ஹை லெவல்ல இருக்கு. பாக்கியலட்சுமியை ரவி பஞ்சு மிட்டாய்னு கூப்பிடறது.. அதையும் சுருக்கி பஞ்சு பஞ்சுன்னு கூப்பிடறது நல்லாருக்கு.'

பதிலாக ரவியை பட்டர் பிஸ்கட்னு பாக்கிய லட்சுமி கூப்பிடறதும் நல்லாருக்கு. ரெண்டு பேரும் விரும்பி சாப்பிடற பொருள் இது. நிலா சீரியலில் நீலாம்பரியின் மகன் சஞ்சய் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவை துப்பாட்டான்னு கூப்பிடறான்.
ஒரு நாள் வண்டியில துப்பட்டா மாட்டிக்குது.. அன்னிலேர்ந்து சஞ்சய் ஸ்வேதாவை துப்பாட்டான்னு கூப்பிடறான். ரோஜா சீரியலில் ரோஜா வீட்டில் எல்லாருக்கும் தெரிஞ்சே அர்ஜுன் சார் அர்ஜுன் சார்னு கூப்பிடறா. இது கூட சில வீடுகளில் நிஜமாவே கூப்பிடற மாதிரியான டிரெண்டிங்கில் இருக்கு.

எல்லாத்துக்கும் மேல அழகு சீரியலில் நம்ம ரேவதி, கணவரான பழனிச்சாமி வாத்தியாரை, பிள்ளை ரவியின் பெயரை சொல்லி ரவிப்பா.. ரவிப்பான்னு செல்லமா கூப்பிடறாங்க.
ஆனா ஒண்ணுங்க.. திருமுருகன் சீரியலில் மட்டும்தான் ரொமான்ஸ் அவ்வளவா இருக்காது.செல்ல பேரும் இருக்காது... பழைய காலத்துல கூப்பிடற மாதிரி அத்தான்... அத்தான்தான்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications