சன் சிங்கரில் டார்லிங்.. கீ... நிக்கி கல்ராணி...
சென்னை: சன் டிவியின் சன் சிங்கர் ரியாலிட்டி ஷோவின் ஃபினாலே நடந்தது. டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து, இப்போது கீ படம் வரை வந்திருக்கும் நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டார்.
அண்மையில் பிரபு தேவாவுடன் இணைந்து இவர் நடிச்சிருந்த சார்லி சாப்ளின் 2 படம் அவ்வளவாக போகலைன்னாலும், ஏ..ஏ..செவத்த மச்சான் பாடலில் பிரபு தேவாவுடன் இவர் சேர்ந்து ஆடியது கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு.

கீ என்றால் பூட்டு சாவி இல்லை..நாம் எந்த செயல் செய்தாலும் அதில், நல்லதும் கெட்டதும் நடக்கும். அதுதான் கீக்கு அர்த்தம். படம் பார்த்தால் தலைப்புக்கான அர்த்தம் புரியும் என்று சொன்னார் நிக்கி.
டெக்னலாஜியில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு, கெட்டது எப்படி எல்லாம் பாதிப்பைத் தருதுன்னு சொல்ற படம்தான் கீன்னு சொன்னார்.
நீங்க டார்லிங் படத்துல நடிச்சு தமிழ்நாட்டோட டார்லிங் ஆயிட்டீங்க..இப்போ கீ குடுத்தா ஆடற பொம்மை மாதிரி அழகாவும் இருக்கீங்க. ஒரு டான்ஸ் ஆடலாமேன்னு சொன்னதும், கீ கொடுத்த பொம்மை மாதிரி அழகாக ஆடினார் நிக்கி கல்ராணி.

பாடகர் மனோவின் மகன் ரித்தீஷ் மேடையில் அப்பாவுக்கு டஃப் காம்படீஷன் குடுப்பது போல அப்பாவுடன் சேர்ந்து என்னம்மா கண்ணு சவுக்கியமா என்கிற பாடலை அப்பாவுக்கு நிகராக பாடினார்.பாடலை கேட்கவும், அப்பா பிள்ளையைப் பார்க்கவும் மகிழ்ச்சியாக இருந்தது
தெய்வமகள் சீரியல் புகழ் கிருஷ்ணா தனது மனைவி சாயாசிங்குடன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இவர்கள் இருவரும் கூட மேடையில் ஜோடி நடனம் ஆடி மகிழ்வித்தார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications