Nila Serial, Tamil Selvi Serial: நிலா மற்றும் தமிழ்ச்செல்வி சீரியல்களின் சங்கமம்!
சென்னை: சன் டிவியில் முற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களான தமிழ்ச்செல்வி மற்றும் நிலா ஆகிய இரண்டு சீரியல்களும் வரும் வாரம் மட்டும் சங்கமம் ஆகி ஒளிபரப்பாக உள்ளதாம்.
பகல் 12:30 மணிக்கு ஆரம்பித்து 1:30 மணி வரை இரண்டு சீரியல்களும் ஒன்றாக ஒளிபரப்பாக உள்ளது.
இரண்டு சீரியல்களின் கதையும் அடி தடி வெட்டு குத்து கதைதான்...

வில்லி நீலாம்பரி
நிலா சீரியலில் சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சித் தொகுப்பாளினி பவித்ரா நிலாவாக நடித்து இருக்கிறார். நீலாம்பரி என்று புகழ்பெற்ற பெயரை வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்து இருக்கிறார்கள். நீலாம்பரி கதாபாத்திரம் இளமையான தோற்றத்துடன் அழகாக இருந்தாலும், வெயிட் கிடையாது.

ஆரம்பத்தில் தமிழ்ச்செல்வி
ஆரம்பத்தில் தமிழ்ச்செல்வி கதையை கிராமத்தில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து இருந்தார்கள். தமிழ்ச்செல்வி கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, கடைசியில் அதற்கு பல தடங்கல். இப்போது கல்யாணம் ஆகி. குழந்தை பிறந்தால் புருஷனுக்கு ஆபத்து என்று ஜோதிடத்தில் சொல்கிறார்கள்.

குடும்ப கட்டுப்பாடு
குழந்தை பிறந்தால் புருஷனுக்கு ஆபத்து என்று ஜோதிடத்தில் சொல்வதால், தமிழ்ச்செல்வி மாமியாரை அழைத்துக் கொண்டு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்கிறாள். ஆனால், மருத்துவர்கள் ஆபரேஷன் செய்துவிட்டதாக சொல்லி சமாளித்து அனுப்பிவிட இப்போது தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருக்கிறாளாம்.

கார்த்திக் நிலா
நிலா அவள் காதலிக்கும் கார்த்திக்கை கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என்று அவளது அத்தை, மற்றும் நீலாம்பரி இருவரும் சதி செய்கிறார்கள். கார்த்திக்கை கொல்வதாக நீலாம்பரி மிரட்டுகிறாளாம். கார்த்திக்கை கொலை செய்துவிட்டு, அந்த கொலையை நீலாம்பரி மேல் போட்டுவிடலாம் என்று அத்தை சதி செய்கிறார்களாம். மொத்தத்தில் போட்டுத் தள்ளு என்கிற வார்த்தை இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது என்று சொல்வது போல.
இந்த இரண்டு சீரியல்களின் ரேட்டிங்கை ஓரளவுக்கு உயர்த்த சன் டிவி திட்டமிட்டு சங்கமத்தை நடத்த முன்வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications