நிலா தாலியை காலண்டர் ஆணியில் மாட்டிட்டாளே....அப்போ... பொய் கல்யாணமா?
சென்னை:சன் டிவியின் நிலா சீரியலில் நிலா தன் உண்மையான அப்பா அம்மாவைத் தேடி காதலன் கார்த்திக்குடன் ஹைதராபாத் போயிருந்தா.
அப்போ அவளுக்கு நீலாம்பரி பல இடைஞ்சல்களை கொடுத்தாங்க.நிலாவின் காதலன் கார்த்திக்கை கொலை செய்யவும்ட துணிஞ்சாங்க.
திடீர்னு பார்த்தா நிலா நீலாம்பரியின் தம்பி அசோக்குடன் மாலையும் கழுத்துமா தாலியோட காரில் வந்து இறங்குறா.

இன்ப அதிர்ச்சி நீலாம்பரிக்கு
நிலாவின் அப்பா ஸ்ரீதரை கொன்னுட்டு ,நிலாவின் சொத்தை அடைய நீலாம்பரி நிலாவை தன் மகனுக்கு அல்லது மனநிலை சரியில்லாத மனைவியுடன் வாழும் தம்பி அசோக்குக்கு கல்யாணம் செய்து அத்தனை சொத்துக்களையும் அடைய நினைக்கறாங்க. இது இப்போது தானாக நடந்து இருப்பதில் நீலாம்பரிக்கு இன்ப அதிர்ச்சி.

ஷாக்கான நிலாவின் அப்பா
கார்த்திக்குடன் தான் அனுப்பி வச்ச நிலா, இப்போது நீலாம்பரியின் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருப்பதை பார்த்த நிலாவின் வளர்ப்பு அப்பா ஷாக் ஆகிடறார். என் பேச்சை கேட்காத உன் இஷ்டத்துக்கு நடந்த நீ என்னுடன் பேசாதேன்னு சொல்லிட்டு அவர் போயிடறார்.

கடிதம் சாதத்தில்
அப்பாவுக்கு இந்த சாப்பாட்டை குடுங்கம்மான்னு சொல்லி தன் வளர்ப்பு அம்மாவிடம் கேரியரில் சாப்பாடு கொடுத்து அனுப்பறா நிலா.கோவத்தில் எனக்கு வேணாம்னு சொன்ன அவர் கேரியரில் ஒரு பேப்பரின் முனை தெரியும்படி இருந்ததை கவனிச்சுடறார்.

கடிதத்தை எடுத்து
சாதத்தில் இருந்த கடிதத்தை எடுத்து படித்து பார்க்கிறார். அப்பா என்னை மன்னிச்சுருங்க... இப்போ என்னால ஓண்ணும் சொல்ல முடியலை. போகப்போக உங்களுக்கே புரியுமப்பான்னு எழுதி இருக்கா.அழுதுகிட்டே கடிதத்தை தூக்கிப் போட்டுடறார் நிலாவின் வளர்ப்பு அப்பா.

காலண்டர் ஆணியில் தாலி
இங்கே நீலாம்பரி வீட்டில் நிலாவின் ரூமுக்குள் கதவைத் தட்டிட்டு போறான் அசோக். உள்ளே வாங்க இது உங்க ரூம்தானேன்னு நிலா சொல்றா. இப்போ என் ரூம்தான்... நமக்குள்ள இது இனிமே உங்க ரூம்தானே..என் பொருட்கள் சிலது தேவையா இருக்குன்னு அசோக் சொல்ல
நிலா தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி காலண்டர் ஆணியில் மாட்டி வைக்கறா... அப்படீன்னா இது பொய் கல்யாணமா?
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications