Nila serial: என்னாது ஆயிரம் கோடி சொத்துக்கு நீலாம்பரி சம்பந்தி செக்யூரிட்டியா?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி நல்ல அழகான இளமையான அம்மா, மாமியார்!. பார்க்க நன்றாக இருக்கிறது.விதம் விதமாக இவர் கட்டும் சேலைகளுக்கு பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.
நிலாவுக்கும், நீலாம்பரிக்கும் போட்டி இன்னும் ஆரம்பிக்காமல் இருக்கும்போதே கதை சூடு பிடித்து சுறுசுறுப்பாக ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
இப்போதுதான்நிலாவின் அப்பா ஸ்ரீதர் தனது பார்ட்னர் என்றும், ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு நிலாதான் வாரிசு என்றும் நீலாம்பரி சொல்றாங்க.

வளர்ப்பு அம்மா
நிலாவின் வளர்ப்பு அம்மா, நீலாம்பரியின் சொத்துக்களுக்கு தனது மகள் ஸ்வேதா வயிற்றில் இருக்கும் குழந்தைதான் வாரிசுன்னு பெருமைப்பட்டுக் கொண்டு இருக்க, திடீரென்று இந்த சொத்துக்கு சொந்தக்காரி நிலாதான்னு உண்மையை போட்டு உடைக்கறாங்க. தான் ஸ்ரீதருடன் சேர்ந்து ஹைதராபாத்தில் பிசினெஸ் பண்ணியதை பற்றி சொல்றாங்க.

இறப்பு ஸ்ரீதர்
ஸ்ரீதர் விபத்தில் இறந்துட்டார் என்றதும் தான் ரொம்ப அப்செட்டா ஆனதும், இருவரில் யார் கடைசிவரை இருந்தாலும், தொடர்ந்து பிசினெஸை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகவும் நீலாம்பரி சொல்றாங்க. அதனால்தான் நிலாவை தேடி கண்டு பிடிச்சு தனது மருமகளாக்கிக்க துடிச்சதாகவும் சொல்றாங்க. ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு தான் இதுவரை செக்யூரிட்டி மற்றும் கார்டியன்னும் சொல்றாங்க.

நீங்க செக்யூரிட்டி
நிலாதான் சொத்துக்கு சொந்தக்காரி, அவள் நம்ம வளர்த்த பொண்ணுதான்னு கவுசல்யா திமிராக நிற்கிறாங்க. என்ன சம்பந்தி இங்கே நிக்கறீங்கன்னு நீலாம்பரி கேட்க, இது உங்க வீடுன்னு இருந்தவரைக்கும் ஏதோ சம்பந்தியம்மா வீடு..நாம எல்லை தாண்டாம இருப்போம்னு நினைச்சேன். ஆனா, இப்போ இது நிலாவோட வீடுன்னு தெரிஞ்சதும் நான் எங்கே வேணும்னாலும் நிற்பேன்... படுத்து கூட உருள்வேன் சம்பந்தி. நீங்க செக்யுரிட்டிதானேன்னு இளக்காரமா பேசறாங்க.

சொத்து வரட்டும்
பேசுடி பேசு.. சொத்து எல்லாத்தையும் என் கைக்கு எழுதி வாங்கிகிட்டு நடுத்தெருவில் நிற்க வைக்க போறேன்னு நீலாம்பரி தனக்குள்ள பேசிக்கறாங்க. என்ன சம்பந்தி இப்போ நீங்க யோசிக்கறீங்கன்னு கவுசல்யா அம்மா கேட்க, அப்படியே இருந்தாலும் இந்த சொத்துக்கு உண்மையான சொந்தக்காரி நிலாவின் அம்மாவும் ,நிலாவும்தான்.நீங்க எப்படி சொந்தம் கொண்டாடுவீங்கன்னு நீலாம்பரி கேட்கறாங்க.
நிலாவை பெத்தது மட்டும்தான் அவ... வளர்த்தது நான்தான். நிலாவுக்கு என்னை பத்தி நல்லா தெரியும்..செக்யூரிட்டி வேலை பார்த்த உங்களுக்கு தெரியாதுன்னு திமிரா பேசறாங்க.
சொத்துக்காக கதை நீண்டுகிட்டே போகுதுங்க...என்ன கதையோ..என்ன மர்மமோ!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications