Nila Serial: இந்த பசங்களை நம்பி எந்த காரியத்திலும் கால் வைக்க கூடாது!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் பகலில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் ஒரு சீரியல். இதில் நீலாம்பரியாக நடிக்கும் நடிகை நல்ல அழகு. அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
நிலா சீரியலின் கதாநாயகி நிலா சன் மியூசிக் டிவியின் தொகுப்பாளினியாக இருந்தவர்.இப்போது சன் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
நிலா கார்த்திக்கை காதலித்தாலும், இப்போது தன் அப்பாவின் சொத்துக்களை மீட்க அசோக்கை கல்யாணம் செய்து கொண்டது போல நடித்து, நீலாம்பரி வீட்டுக்குள் மருமகளாக கால் பதிக்கிறாள்.

கார்த்திக் நிலா
நிலா காதலன் கார்த்திக்கின் சம்மதத்தோடு, அசோக்கின் மனைவியாக நடிக்க வருகிறாள். முழுமையாக அப்படி நடித்தால்தானே நீலாம்பரியின் நம்பிக்கையை பெற முடியும்.அது போல நடிக்கிறாள், அசோக்கும் நிலாவுக்கு உதவி செய்கிறான். ஆனால்,பாருங்க இந்த பசங்களை நம்பி ஒரு உண்மையையும் சொல்லி ஒரு காரியத்தை செய்ய கூடாது என்பது போல இருக்கிறது இப்போது கார்த்திக்கின் நடவடிக்கை.

ஸ்வேதா நிலா
தாலி பிரிச்சு கோர்க்கப் போன இடத்தில், அசோக்குக்கு கத்தி குத்து பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருக்க, டாக்டர்கள் கை விரித்து விடுகின்றனர். நிலா தீச்சட்டி ஏந்தி, விரதமிருந்து அசோக்கின் உயிரை மீட்டு கொண்டு வந்துடறா. இதனாலும் நீலாம்பரியின் நம்பிக்கையை பெற்றுவிட, கொந்தளிப்பில் இருக்காள்; அவளின் தங்கை ஸ்வேதா. ஸ்வேதாவை நீலாம்பரி நிலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க சொல்றாங்க. ஸ்வேதாவுக்கு எரிச்சலாக வருகிறது.

போதையில் கார்த்திக்
இங்கு குடி போதையில் கார்த்திக், நிலாவை நடிக்க சொன்னால் உண்மையாவே அசோக்கின் பொண்டாட்டி மாதிரி விரதம், பூஜை, தீச்சட்டி எடுக்கறதுன்னு என்னை வெறுப்பேத்தறா. இனிமேல் அவளை நான் விட்டு வைக்க மாட்டேன்.நீ நடிச்சது போதும்னு அவளை கூட்டிகிட்டு வரப்போறேன்னு கத்தறான் கார்த்திக்.நண்பன் எவ்வளவோ சொல்லியும் கேட்காத கார்த்திக், அந்த இரவு நேரத்தில் நிலாவுக்கு போன் செய்யறான்.

நிலாவின் போன்
நிலாவின் போன் அவளது அறையில் ஒலிக்க, நிலா போனை சார்ஜரில் போட்டுட்டு கீழே படுத்து தூங்கறா. போன் அடிப்பதை எடுக்க, அறைக்குள் நுழைகிறாள் ஸ்வேதா.என்ன நிலா கீழே படுத்திருக்கா. அசோக்குக்கு உடம்பு சரியில்லைன்னு கீழே படுத்து இருக்காளான்னு கேட்டுகிட்ட ஸ்வேதா அடிக்கும் போனை பார்த்தால் கார்த்திக்னு வருது.

இந்த பசங்களே
உடனே நமக்கு எதாவது கிடைக்கும்னு போனை எடுத்து நிலா மாதிரி பேசறா. நீ உடனே வா நிலா.உன்னை பிரிஞ்சு என்னால இனிமே இருக்க முடியாது. உன் காதலனை விட சூழ்நிலைதான் முக்கியமா? நாளைக்கு ராத்திரிக்குள்ள நீ என் கூட வந்துடணும்னு சொல்றான்.அவளும் போனை வைத்துவிட்டு, நாளைக்கு நீ வந்து என்னை அழைச்சுக்கிட்டு போன்னு மெசேஜ் அனுப்பறா. பொறுமை இல்லாத பசங்க...இந்த பசங்களே இப்படித்தான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications