நிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் தம்பதிகளான ஜனனியும், சந்தோஷும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தாலும் விவாக ரத்து எனும் முடிவை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள்.
சந்தோஷ் சக்தின்னு ஒரு பெண்ணை காதலிச்சு இருக்கான்.அவளை அவளோட அம்மா அப்பா சந்தோஷிடம் இருந்து பிரிச்சு அழைச்சுட்டு போயிடறாங்க.
சந்தோஷுக்கு ஜனனியோட கல்யாணம் ஆகிறது.சந்தோஷுக்கு ஜனனியோட வாழவும் முடியலை. சக்தியை மறக்கவும் முடியலை.

ஃபார்மாலிட்டீஸ்
டைவர்ஸ் பண்ணலாம்னு போனா ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டீஸ்...ஜனனி நொந்து போயிடறா.. சந்தோஷை பிரிய கூடாதுன்னும் நினைக்கறா. எதையும் மனசுவிட்டு பேச முடியலை.

கை பக்குவம்
வீட்டில் எல்லாருக்கும் ஜனனியை பிடிச்சு போகுது. விதவிதமா சமைச்சு போட்டதில் மாமனார் மனைவியின் கை பக்குவம் ஜனனிக்கு வந்துட்டதா சொல்றார்.

அப்டீன்னா என்ன
இந்த சமயத்துலதான்... இந்த வத்த குழம்பு சாதத்தை நிலா சோறா சாப்பிட்டா ரொம்ப நல்லாருக்கும்னு சொல்றா ஜனனி. நிலா சோறா அப்டீன்னா என்ன அண்ணின்னு கேட்குது நாத்தனார்.

நிலா சோறு
பவுர்ணமி அன்னிக்கு சாப்பாட்டை மொட்டை மாட்டி அல்லது முற்றத்துல வச்சு வெட்ட வெளியில சாப்பிடறதுதான் நிலா சோறுன்னு சொல்றா ஜனனி.

ஒவ்வொருத்தர் கையிலயும்
அண்ணி..அப்டீன்னா இன்னிக்கு சாப்பிடலாம் அண்ணின்னு சொல்ல எல்லாரும் மொட்டை மாடியில வட்டமா உட்கார்ந்துக்கறாங்க. ஜனனி பெரிய கிண்ணத்தில் மொத்தம் சோறை போட்டு, அதுல வத்த குழம்பை ஊத்தி பிசைஞ்சு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உருண்டையா பிடிச்சு ஒவ்வொருத்தர் கையிலயும் தர்றா.

நிலா சோறு
இந்த நிலா சோறை சந்தோஷமா சாப்பிட்டுட்டு மொட்டை மடியிலேயே எல்லாரும் படுத்து தூங்கறாங்க... நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா நிலா சோறு... விருப்பப்பட்ட எந்த சாப்பாடு வேணும்னாலும் சாப்பிடலாம்... நிலா வெளிச்சத்தில்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications