சீரியல்களில்தான் திமிரு பிடிச்ச வில்லி.. ஆத்தாடி.. என்னா ஆட்டம்.. கலக்குறாங்களே நிவாஸினி!
சென்னை: சீரியல்களில் திமிரு பிடிச்ச வில்லியாக கலக்கிக்கொண்டு ஆனால் இணையதளத்தில் ஹீரோயின்களுடன் இவர் அடிக்கும் லூட்டியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதானே என் பொன்வசந்தம் சீரியலில் வில்லி கேரக்டரில் மீராவாக கலக்கிக் கொண்டிருக்கும் நிவாஸினி திவ்யாவை பார்த்து ரசிகர்கள் அரண்டு போயிருக்கிறார்கள்.
இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அதனால் தமிழில் சரளமாக பேசுகிறார். கண்களால் மிரட்டும் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவாஸினி முதன்முதலில் செல்லக்கிளி என்ற சீரியல் மூலமாகத்தான் அறிமுகமாகியிருக்கிறார்.

மரகத வீணை நிவாஸினி
குமரேசன் வெற்றிவேல் போன்ற பிரபல நட்சத்திரங்களுடன் நடித்திருக்க செல்லக்கிளி போன்ற பல சில பிரபலமான சீரியல்களில் அவர் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல சன் டிவியில் ஒளிபரப்பான மரகதவீணை சீரியலிலும் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். தற்போது இவர் நீதானே என் பொன் வசந்தம் சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நீதானே என் பொன் வசந்தம்
அந்த சீரியலில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கிறதாம் .அந்த சீரியலில் இவரது உடையை பார்த்து பொறாமைப்படும் சிலர் கலாய்க்கும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் டைமில் செய்யும் ரகளைகள் இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்.

திமிர் பிடிச்ச வில்லி
நீதானே பொன்வசந்தம் சீரியலில் இவர் அனு , சூரிய பிரகாஷிடம் பேசுவதை நினைத்து பொறாமைப்படும் காட்சிகளில் இவரை பார்த்து ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள் .ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து சமூக வலைதளத்தில் போட்டிருக்கும் ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறதாம். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ சீரியல்களில் எங்களை நீங்க ஏமாற்றிவிட்டு இருக்கீங்களா அப்படின்னு குழந்தை போல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

குவிந்து கிடக்கும் டிக்டாக்
இந்த சீரியலில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சாப்பிட்டு அதையும் டிக்டாக்கில் எடுத்து அதை இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த பார்த்த ரசிகர்கள் ஜாலியாக கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். மேலும் இந்த ஊரடங்கிற்க்கு பிறகு சூட்டிங் நடைபெறுவது இவர்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறதாம். இவ்வளவு நாளா வீட்டுக்குள்ளே இருந்து ரொம்பவும் கஷ்டமாக இருந்ததாம்.

நாய்க்குட்டி பிரியை
நிவாஸினிக்கு நாய் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். நாய் மட்டுமல்ல வீட்டு விலங்குகள் வளர்ப்பது இவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம். அதை ரொம்ப பாசமுடன் கேர் எடுத்து பார்த்துக் கொள்வாராம். அந்த நாய்களை வைத்தும் இவர்கள் டிக் டாக் வீடியோக்கள் ஆக எடுத்து போட்டிருக்கிறார். சீரியலில் இவரை பார்த்து கேவலமான கமெண்டுகளை போட்ட ரசிகர்கள் இவருடைய இந்த குழந்தைத்தனமான போட்டோக்களை பார்த்து ரசிக்கிறார்களாம்.

கிண்டலடிச்சா டோன்ட் கேர்
இவர் புசுபுசுன்னு புஷ்டியாய் இருப்பதை பார்த்து பல மீம்ஸ்களும் நெட்டிசன்கள் போட்டு வருகிறார்கள். இதைப் பார்த்து இவர் சிரித்துக் கொண்டிருக்கிறாராம். ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்வாராம். இது போதாதென்று இவர் ஒரு மாடலாக விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். சில ரசிகர்கள் இவரை எந்த கடையில் அரிசி வாங்கினீர்கள் என்று கிண்டலடித்தனர் இந்த மாதிரி கமெண்ட்டுகளை அவர் கண்டுக்க மாட்டாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications