Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிங்க் கலரில் அழகின் பிரமாண்டம்... பின்னும் நிவிஷா.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்களிலும் திரைப்படங்களிலும் இப்ப எல்லாம் அழகான வில்லிகலாகவே அறிமுகப்படுத்துகிறார்கள், அவர்களும் அதகளப்படுத்துகிறார்கள்.

ரசிகர்களும் அவர்களையே ரொம்பவும் விரும்புவதால் வில்லிகள் கூட கதாநாயகிகளை விடவும் அழகாக இருக்கிறார்கள், கெத்து காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட வில்லி நடிகைககளில் ஒருவர்தான் நம்ம நிவிஷா.

வில்லியாக இருந்தாலும் இணையதளங்களில் தனக்குன்னு பெரும் ரசிகர்களை வைத்திருக்கும் நிவிஷா மாடல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரொம்பவும் போர் அடித்து விட்டது போல, அதனால் தற்போது அழகான சுடிதாரில் தேவதை போல போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.

தெய்வமகள் அறிமுகம்

தெய்வமகள் அறிமுகம்

நிவிஷா தெய்வமகள் சீரியல் மூலமாக அறிமுகமாகி முதல் சீரியலே தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திவிட்டார். இந்த சீரியலில் இவர் கல்லூரி பெண்ணாக நடித்திருப்பார். உண்மையிலேயே இந்த சீரியலில் நடிக்கும்போது கல்லூரி தான் படித்துக் கொண்டிருந்தாராம் .அதில் கிராமத்து பெண்ணாக நடிக்கும் போது இவருக்கு ரொம்பவும் எளிமையாக நடித்திருப்பார்.

நிவிஷாவின் பொன்னூஞ்சல்

நிவிஷாவின் பொன்னூஞ்சல்

தெய்வமகள் சீரியலில் இவர் சங்கீதா எனும் கேரக்டரில் நடித்திருப்பார். இதைதொடர்ந்து சன் டிவியில் பொண்ணுஞ்சல், கங்கா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு போன்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கலர்ஸ் தமிழில் சிவகாமி சீரியலிலும் நடித்து கொண்டிருந்தார். அதற்குப் பிறகு ஈரமான ரோஜாவே என்னும் சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

 ஹீரோயின் டூ வில்லி

ஹீரோயின் டூ வில்லி

ஈரமான ரோஜாவே சீரியலில் முதலில் இவர் தான் கதாநாயகி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீரென டைரக்டர் கதையை மாற்றி விட்டாராம். இவரது ஸ்டைல் மற்றும் அழகு எல்லாமே வில்லி கேரக்டர் தான் செட் ஆகும் என்று இவரை வில்லி ஆக்கிவிட்டாராம். முதலில் இவர் டைரக்டரிடம் சண்டைதான் போட்டிருக்கிறார். இதில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார்.

நிவிஷாவிடம் விளக்கிய இயக்குநர்

நிவிஷாவிடம் விளக்கிய இயக்குநர்

இயக்குநர் நிவிஷாவை உட்கார வைத்து.. விரிவாக விளக்கிய பிறகுதான், கதையின் தாக்கத்தை புரிந்துகொண்டு சரி என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் நடித்தபோது, உடன் நடித்த சுஜி வாசன் அனன்யா மூவருமே பெஸ்ட் பிரண்டாகி விட்டனர். அதுவும் அனன்யாவும் இவரும் தான் முதலில் குளோஸாகியுள்ளனர். அப்படி திக்கான பிரண்டாகி விட்டனராம். இவர்களின் ஜாலி லைஃபை பார்த்துதான் சுஜி வாசனும் இணைந்து இருக்கிறார்.

லூட்டி சேட்டை

லூட்டி சேட்டை

மூன்று பேரும் சேர்ந்து செமையாக வெளியே சுற்றுவார்களாம் . இவர்களுக்கு அடிக்கடி அவுட்டிங் என்றால் ரொம்பவே பிடிக்குமாம். சூட்டிங் இல்லாத நேரங்களில் ஜாலியாக சுற்றிக்கொண்டு ஷாப்பிங் எல்லாம் முடித்துக்கொண்டு தான் வருவார்கள். சீரியல்களில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்துக்கொண்டு நிஜத்தில் மாற்றி மாற்றி கலாய்க்கும் செமையான பிரண்டாக இருக்கிறார்கள்.

கொள்ளைப் பிரியம்

கொள்ளைப் பிரியம்

இவருக்கு மேக்கப் என்றாலே கொள்ளை பிரியமாம் எப்பவும் மேக்கப் போடுவது தனி சுகம் தான் என்று விரும்பி போடுவாராம். அதுமட்டுமல்லாமல் புது புது துணிகளை உடுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்துவதால் எவ்வளவு ட்ரெஸ்ஸஸ் இருந்தாலும் இவருக்கு போதாது என்றுதான் தோன்றுகிறது. அந்த அளவிற்கு புது டிரஸ் நகைகளின் மீது மோகம் இவருக்கு அதிகமாக தான் இருக்கிறதாம். அது போதாதென்று டிக் டாக்கில் கில்லியாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது அது தடை செய்யப்பட்டு இருப்பதால் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

கிளாமரில் கில்லி

கிளாமரில் கில்லி

மணப்பெண் அலங்காரத்தில் தொடங்கி படு கிளாமரான போட்டோஸ் வரைக்கும் விதவிதமாக எடுத்து குவித்து வருகிறார். அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அப்பப்ப பதிவிட்டு ரசிகர்களுக்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டி வருகிறார். சீரியலில் வில்லியாக பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தேவதையாக பார்த்து ரசிக்கிறார்கள் .கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் நன்றாக புசுபுசுவென்று ஆகிவிட்டார் .இந்த அளவிற்கு மாறுவார் என்று எதிர்பார்க்காத அளவிற்கு பப்ளிமாஸ் மாதிரி ஆகிவிட்டார்.

புசுபுசுன்னு மாறிட்டாரே

புசுபுசுன்னு மாறிட்டாரே

முதல் சீரியலில் அறிமுகமாகும்போது படு ஸ்லிம்மாக இருந்த இவரா இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் அதன் பிறகு தற்போது மீண்டும் ஸ்லிம்மாகவும் படு கவர்ச்சியாகவும் மாறிவிட்டார். இவர் உடம்பை குறைத்தது தான் குறைத்தார் இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார் .உடல் எடையை குறைத்தாலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறார் .

சுடிதார் தேவதை

சுடிதார் தேவதை

தன்னுடைய அழகை கவனிப்பதிலும் மெனக்கட்டு இவர் விதவிதமாக மேக்கப் போடுவதிலும் தவறுவது இல்லை .ஆனால் தற்போது எடுத்திருக்கும் போட்டோவில் மேக்கப் குறைத்து எளிமையான சுடிதாரில் தேவதை போல மின்னுகிறார் .இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் இவரை ஏகத்துக்கும் வர்ணித்து வருகிறார்கள் . இவ்வளவு நாளா ஃபுல் மேக்கப்பில் மாடல் உடையிலும் கவர்ச்சியாக பார்த்தவர்களுக்கு இப்போது இப்படி பார்ப்பது புதுசாக தான் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+