Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nizhalgal movie: என்னை போலீஸார் அடிச்சாங்க! இழுத்து வெளியே தள்ளினாங்க! ராஜசேகர் மனைவி தாரா கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்த போது போலீஸார் என்னை அடித்து தரதரவென இழுத்து வெளியே தள்ளினார்கள் என நிழல்கள் படத்தின் ஹீரோ ராஜசேகரின் மனைவி தாரா கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் வீட்டை சீல் வைத்த போது தான் வளர்த்த பூனைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து சீல் வைத்துவிட்டதால் அவற்றில் 3 பூனைகள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

Rajasekar wife Thara

இதுகுறித்து வாவ் தமிழாவில் ராஜசேகரின் மனைவி தாரா கூறியிருப்பதாவது: பத்தரை லட்சம் ரூபாயை நான் கொண்டு போய் வங்கியில் கட்டுகிறேன். அப்போது என் வீடு விற்பனையாகிவிட்டதாக வங்கி நிர்வாகத்தினர் சொன்னார்கள்.

நான் வீட்டை விற்பனை செய்யாமலேயே விற்பனை செய்துவிட்டதாக சொன்னார்கள். நீங்கள் மொத்த பணத்தை கொடுத்தால்தான் வீட்டை தர முடியும். இல்லாவிட்டால் நாங்கள் விற்றுவிடுவோம் என்றார்கள்.

லோன் எதுக்கு

லோன் வாங்குவதே மொத்த பணத்தையும் கட்ட முடியாது என்பதால்தானே, மொத்த பணத்தையும் கட்ட வேண்டும் என்றால் லோன் ஏன் கொடுக்கிறீங்க? இந்த 10.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு செல்லுங்கள் என சொல்லிவிட்டார்கள்.

10.5 லட்சம்

அங்கு போய் கேட்டால், 10.5 லட்சம் ரூபாயை வாங்கக் கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது என்றார்கள். எனக்கு தெரிந்த ஒரு தோழி சந்திரிகா என்பவர் என்னை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்றார்.

விண்ணப்பம்

அங்குள்ள பார்ம்களை ஃபில்லப் செய்வது போல் செய்து அந்த பத்தரை லட்சத்தை அவருடைய வங்கிக் கணக்கில் போட்டுவிட்டார்கள். அவரின் மகனின் படிப்புக்காக அமெரிக்காவுக்கு அந்த பணம் சென்றுவிட்டது.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகளாக வங்கி நிர்வாகத்தினர் பணம் குறித்து எதுவும் பேசவில்லை. இதனால் நான் அந்தம்மா பணத்தை கட்டிவிட்டதால்தான் வங்கி நிர்வாகம் அமைதியாக இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் 2 ஆண்டுகள் கழித்து வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது நான் சந்திரிகாவுக்கு போன் செய்தேன். அவர் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் அந்த 10.5 லட்சத்தை வங்கி நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பணத்தை வாங்கி

பணத்தை வாங்கிக் கொண்டு வங்கி நிர்வாகத்தினர் ஏமாற்றினால் எனக்கென்ன தெரியும் என அந்த அம்மா என்னிடம் கேட்டார். பின்னர் அந்தம்மா அமெரிக்காவில் இருந்து வந்ததும் அவரிடம் நான் போய், "என்னை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டீர்களே" என சண்டையிட்டேன்.

வங்கி நிர்வாகம்

அப்போது வங்கி நிர்வாகம் ஏமாற்றிவிட்டார்கள் போல, நான் வந்து உனக்கு காசை வாங்கித் தருகிறேன் என்றார் அந்த பெண். பின்னர் எனக்கு ஒரு காசோலையை கொடுத்தார். அவர், "நான் சொல்லும் தேதியில் நீங்கள் போய் உங்கள் பணத்தை வங்கியில் எடுத்துக் கொள்ளுங்கள்" என கூறி blank cheque கொடுத்தார்கள்.

இன்சூரன்ஸே இல்லை

இந்த பணத்தை வங்கி நிர்வாகம் அப்போதே வாங்கியிருந்தால் எனக்கு பிரச்சினை வந்திருக்காது. இன்சூரன்ஸ் என்ன ஆச்சு என கேட்டால், இன்சூரன்ஸே போடவில்லை என்றார்கள். அப்படியென்றால் , 65 வயதான என் வீட்டுக்காரருக்கு எந்த நம்பிக்கையில் லோன் கொடுத்தார்கள்.

அழுதேன்

வங்கிக்கு போய் நான் தினமும் கதறி அழுவேன். லோன் வாங்கித் தந்தவர் என்னை பார்த்தாலே ஓடிடுவார். என் வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஏதும் கொடுக்கவில்லை. என் வீட்டில் நான் தூங்கிக் கொண்டிருந்த போது 30 பேர் போலீஸாருடன் வந்து என்னை தூக்கி வெளியே போட்டார்கள்.

போலீஸார் செய்த செயல்

போலீஸார் என்னை அடித்து வெளியே தள்ளினார்கள். அதை செய்ய அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. என் வீட்டுக்குள் வருவதற்கு முன்னர் என் வீட்டில் இருந்த கேமராவை எல்லாம் ஆஃப் செய்துவிட்டார்கள்.

6 பூனைகள்

வீட்டுக்குள் நான் 6 பூனைகளை வளர்த்தேன். வங்கிக்காரர்கள் என்னை வெளியே தூக்கி போட்டு வீட்டை சீல் வைத்துவிட்டார்கள். நான் வீடு இல்லாததால் எனது தோழி வீட்டில் தங்கியிருந்தேன். அந்த பூனைகள் வீட்டிலேயே இறந்துவிட்டன. இந்த துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் எனக்கு போன் செய்து சொன்னார்கள்.

15 ஆண்டுகள்

நான் போலீஸுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து அழைத்து வந்தால், அவர்கள் நீங்கள் பூனைக்கு வைத்த சிக்கன் நாறுகிறது என்றார்கள். பின்னர் சீலை நீக்கி கதவை திறந்த போது கூட என்னை உள்ளே விடவில்லை. 15 ஆண்டுகளாக அந்த பூனைகளை நான் வளர்த்து வந்தேன். எனக்கு அவைதான் ஆறுதல். நான் உடல் நிலை சரியில்லை என்றாலும் என் காலை அந்த பூனைகள் அழுத்திவிடும். என்னை சுற்றி படுத்துக் கொள்ளும்.

வீட்டை சீல் வைத்த காப்பி எங்கே

வீட்டை சீல் வைக்க சொல்லி ஹைகோர்ட் சொன்ன உத்தரவு காப்பியை கூட என்னிடம் காட்டவில்லை. என்னை மாமியார் வீட்டில் கூட சேர்க்கவில்லை. என் தாய் வீட்டிலும் என்னை சேர்க்கவில்லை. இவ்வாறு தாரா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+