Sembaruthi Serial: ஒரு பிரச்சனையும் பெரிசாகலை.. ஒரு தலையும் உருளலை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஒரு பிரச்சனையும் பெரிசாக மாட்டேங்குது.. ஒரு தலையும் உருள மாட்டேங்குது என்று வில்லி வனஜா வசனம் பேசறாங்க.

அகிலாண்டேஸ்வரி அம்மா வீட்டில் வேலை செய்யும் சுந்தரம் விசுவாசத்தில் கறை படிஞ்சுருச்சும்மா என்று மன்னிப்பு கேட்க.

எல்லாம் தெரியும்.. நீ எதுவும் சொல்ல வேணாம் எனும்போதுதான் வில்லி வனஜா இந்த வசனத்தை பேசறாங்க.

 விசுவாசத்துல கறை

விசுவாசத்துல கறை

டிரைவர் சுந்தரம் அகிலாண்டேஸ்வரியிடம், அம்மா என்னை மன்னிச்சுருங்கம்மா...என் விசுவாசத்துல கறை பட்ருச்சு. உண்மையை மறைச்சுட்டதாலத்தான் நான் தற்கொலை செய்துக்க போனேன். ஆனால், இப்போ எல்லா உண்மையையும் சொல்லிடறேன்மா.. என் விசுவாசத்துல கறையோட நான் சாக விரும்பலைம்மான்னு அழறார்.

 ஆஹா விசுவாசம்

ஆஹா விசுவாசம்

ஆஹா விசுவாசம் எல்லா உண்மையையும் சொல்லப் போகுதுன்னு வனஜா ஆவலா காத்து நிற்க, சுந்தரம் எனக்கு நீ சொல்ல நினைக்கற எல்லா உண்மையும் தெரியும். உன் விசுவாத்துல கறை படிஞ்சுருச்சுன்னுதான் நானும் நினைச்சேன். ஆனா, இப்போ எல்லாத்தையும் சொல்ல வந்ததுனால உன் விசுவாசத்தை நீ நிரூபிச்சுட்டே இனிமே உனக்கு குற்ற உணர்ச்சி வேணாம்னு சொல்லிட்டு போயிடறாங்க.

 வா பார்வதி வா

வா பார்வதி வா

அப்போதுதான் வனஜா சொல்றா...விசுவாசம் எல்லாத்தையும் சொல்ல வரத்துக்குள்ளே அகிலாண்டேஸ்வரி தடுத்து நிறுத்திட்டாளே.. ஒரு பிரச்சனையும் பெரிசாக மாட்டேங்குது. ஒரு தலையும் உருள மாட்டேங்குதுன்னு. சுந்தரம் வீட்டுக்கு வந்து அதுக்குள்ளே மகள் பார்வதியை வா வான்னு கூப்பிடறார் அம்மாவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுருச்சு.நீயும் அம்மா காலில் வந்து விழுந்தா உன்னையும் மண்ணிச்சு ஏத்துக்குவாங்கன்னு சொல்றார்.

 பொறந்த நாளன்னிக்கு

பொறந்த நாளன்னிக்கு

அதுக்குள்ளே ஆதி வந்து அம்மாவுக்கு நானும் பார்வதியும் கல்யாணம் செய்துக்கிட்டது தெரியாது. காதலிக்கறது மட்டும்தான் மாமா தெரியும். பொறந்த நாளன்னிக்கு நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் மாமா அதுவரைக்கும் பொறுமையா இருங்கன்னு சொல்றான் ஆதி.

இதே கதைதான் கடந்த ஒரு வருஷத்துக்கு மேல போகிட்டு இருக்குது. பொறந்த நாள் விஷயம் கடந்த மூணு மாசமா நகருது.இந்த மாசம் 30ம் தேதின்னு மூணு 30 தேதி போயிருச்சு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+