Maharaasi Serial: மகராசிக்கு ஃபேமிலி பாட்டுன்னு கூட தெரியலியேப்பா...!
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் இது புவி கம்போஸ் பண்ணின இசை.. அவருக்கு மட்டுமே தெரிந்த பாட்டுன்னு பாரதி சொல்றாளே தவிர...இது ஃபேமிலி பாட்டாச்சே...இது எப்படி இந்த அன்புக்கு தெரிஞ்சுதுன்னு ஒரு கேள்வி வரலியே பாரதிக்கு.
புவிதான் மவுத் ஆர்கன் வாசிக்கறான்னு புவி புவின்னு சொல்லி கோயில் முழுக்க தேடி ஓடுகிறாள் பாரதி. அங்கே ஒருத்தன் மவுத் ஆர்கன் வாசிச்சுகிட்டு நிற்பது போல காண்பிக்க அருகில் போகிறாள் பாரதி.
புவின்னு கூப்பிட்டால், திரும்பி பார்க்கிறான் தமிழ்... இந்த இசை உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டு பதைத்து நிற்கிறாள் பாரதி.

அநாதை ஆஸ்ரமம்
இந்த இசை புவிக்கு மட்டுமே தெரிஞ்ச இசை தமிழ்.. இது எப்படி உங்களுக்கு தெரிஞ்சதுன்னு பாரதி கேட்க...அண்ணி இது நம்ம மில்லில் வேலை பார்க்கும் அன்பு வாசிச்சது அண்ணி.. அவர் தங்கி இருந்த அநாதை ஆஸ்ரமத்தில் மவுத் ஆர்கன் வாசிக்க கத்துக்கிட்டதாம்னு புவி பராதிகிட்டே சொன்னதையே இவனும் சொல்ல..

ஒருத்திக்கு இப்போதும்
புவியின் ஆத்மார்த்த மனைவியாக வாழ்ந்த பாரதிக்கு... இது புவி நமக்கு மட்டுமே டியூன் போட்டு வாசிச்சு இசையாச்சேன்னு சந்தேகம் வராது? ஓடிப்போய்.. இந்த இசை உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அன்புன்னு கேட்க மாட்டாளா? எதாவது ஒரு சின்ன துரும்பு கிடைச்சால் கூட அதை பிடிச்சு ஆளை கண்டு பிடிக்க நினைக்க மாட்டார்களா?

அன்பு மலர்களே
எம்ஜிஆர் காலத்தில் இருந்து குடும்ப பாட்டுன்னு ஒன்னு வச்சுக்கிட்டு இன்று வரை அதை கடைப் பிடித்து வரும் சினிமாவுக்கே அல்வா குடுக்கற மாதிரி இருக்குது இந்த மகராசி சீரியல் கதையின் இழுவை. எந்த காலத்திலும் குடும்ப பாட்டுன்னா இப்படித்தான் இருக்கணும்.. அதை மாத்தி...சப்புன்னு ஆக்கிட்டீங்களே...

எட்டுத் திக்கும்
குடும்ப பாட்டுன்னாலே அதுல லாஜிக் பார்க்காம எந்த மூலையில் ஒலிச்சாலும் குடும்பம் அந்த பட்டை கேட்டு ஒண்ணு சேர்ந்துரும். இங்கே பக்கத்தில் இருந்து ஒருத்தன் வாசிக்கறான்.. இதில் லாஜிக் இருந்தும்..சீரியலில் எடுபடலை.. என்னங்க சீரியல் எடுக்கறீங்க...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications