Lockdown: ஏன்டாப்பா.. சீரியல்களை தூக்கி தூரப் போடாம இப்படி இழுத்துட்டே போனா எப்படி!
சென்னை: லாக் டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் இன்னும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இழுவைக்கு வச்சு இருந்த காட்சிகளை இப்போது எபிசோடாக்கி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
மைண்ட் வாய்ஸ் பேசுவது...ஃபிளாஸ் பேக் காட்சிகளை தேவை இல்லாமல் செருகுவது என்று இன்றுவரை சீரியல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகித்தான் வருகின்றன.
ஃபிளாஷ் பேக்கில் டூயட் பாடி இருந்தால் கூட அதையும் இப்போது நினைத்து பார்ப்பது போன்ற காட்சிகள் என்று சீரியல்கள் இழுவை.. அரைத்த மாவின் அரைவை...

சித்தி 2 சீரியல்
ராதிகா சரத்குமாரின் சித்தி 2 சீரியல் எப்போதும் அண்மைய காலத்தில் சூட் செய்ததாகத்தான் இருக்கும். அதனால் ஆர்ட்டிஸ்ட் இல்லாமல் ராதிகா, பொன்வண்ணன்... இருவர் நடித்த காட்சிகள் மட்டுமே வீட்டில் இருந்தது. சப்போர்ட் ஆர்ட்டிஸ்ட் என்று கூட யாரும் இல்லை. வீட்டில் யாருமே இல்லாதது போல வெறுமையாக இருந்தது எபிசோட்.

ரோஜா சீரியல்
சன் டிவியின் ரோஜா சீரியலில் ஃபிளாஷ் பேக் காட்சிகள் .. ரொமான்ஸ் காட்சிகளை நினைத்து பார்ப்பது.. டைட்டில் சாங் முழுவதுமாக ஒளிபரப்புவது என்று ஒப்பேற்றினார்கள். இதில் நாளை... என்று கொஞ்சம் நொடிகளை எடுத்துக்கொண்டு நாளை ஒளிபரப்பாக இருக்கும் சில காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.

எப்போதும் போல
சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் மட்டும் எப்போதும் போல முழு எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது. கல்யாண வீடு சீரியல் திருவையாறு, காரைக்குடி போன்ற ஊர் பகுதிகளில் ஷூட்டிங் என்பதால் தாமதமாக லாக் டவுன் வேலை செய்து இருக்கிறது போலும். இல்லை எப்போதும் போல முன்னேற்பாடாக திருமுருகன் ஷூட் செய்து வைத்து இருக்கலாம்.

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவி சீரியல்கள் கூட எப்போதும் போல வழக்கமான தங்களது ஸ்லோ மோஷன் எபிசோடுகள் இழுவை மாதிரிதான் இன்னும் சீரியல்களை கொடுத்து வருகின்றன. இவர்களின் சீரியல்களின் இருப்புக் காட்சிகளுக்கு இன்னும் பற்றாக்குறை வரவில்லை போலும்.

எடிட் கட்
சில சீரியல்களில் எடிட் செய்து கட் செய்து வைத்திருந்த ஷாட்களை இப்போது தேவையான இடங்களில் சீரியலின் இழுவைக்கு என்று இருந்த நிலை மாறி சீரியலின் எபிசோட் தேவைக்கு ஏற்ப எடுத்து அங்கங்கே செருகி எபிசோடை ஒளிபரப்பி வருகிறார்கள். இப்படியாக ஒப்பேற்றி சீரியலை ஒளிபரப்பி வருகிறது தொலைக்காட்சி சானல்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications