யக்காவ்.. விளையாட்டு... வேடிக்கை... ரொமான்ஸுன்னு இருந்துச்சு... இனி அவ்ளோதானா
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ஒரு ஜாலி சீரியல்னு சொல்லலாம். அந்த அளவுக்கு லைட் வெயிட்டாத்தான் இதுவரைக்கும் சீரியல் இருந்துச்சு.
ரோஜா, அர்ஜூனுக்குள் விளையாட்டு, வேடிக்கை, வீட்டாரை நம்பவைக்க ரொமான்ஸ் டிராமா இப்படித்தான் சீரியல் இருந்துச்சு.
ஆனா, வழக்கம் போல நல்ல குடும்பம், இதை கெடுக்க அலையும் ஒரு கூட்டம்னு ஆட்கள் குறைவாக இருந்தாலும் நிறைவாத்தான் சீரியல் போகுது. இந்த மேட்டரைத்தான் நம்ம ராணியக்காவும் கலாக்காவும் வாயில் போட்டு மென்று துப்பினார்கள்.. அவர்கள் பேசியதைக் கவனிப்போம் வாங்க..

பிரியமானவளே
ராணிக்கா... இந்த ரோஜா சீரியல்ல கான்டிராக்ட் கல்யாணம்னு சொல்றாங்களே.. அது மாதிரி உலகத்துல நடக்குமான்னு கேட்கறா கலா. இவ ஒருத்தி.. ராத்திரியில் நாடகம் பார்க்கறது.. பகல்ல வந்து என் உசிரை வாங்கறது.. ஆமா.. உங்காளு விஜய் படத்துல சிம்ரனை ஒரு வருஷ கான்டராக்ட்ல கல்யாணம் பண்ணிக்கலையா...

இது போல நடக்குமான்னு
ராணிக்கா நான் கேட்டது.. இது போல உலகத்துல நடக்குமான்னுதான் கேட்கறா கலா. அவங்கவங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரிதான் எல்லாமே நடக்குதுடி.. நினைச்சு பாரு கொலை செய்யறது.. கொள்ளை அடிக்கறது இதெல்லாம் சீரியல்ல காமிக்காறாங்கத்தான். இது என்ன ஊர் உலகத்துல நடக்கலியான்னு கேட்கறா ராணி.

தினமும்
ராத்திரி 9 மணியானா போதும். தவறாம எம் புருஷன் டிவிக்கு முன்னால உட்கார்ந்துரும். ரோஜாவும், அர்ஜுனும் பண்ற திருவிளையாடலை பார்த்து ரசிக்கும். குடியை கூட மறந்துரும்னா பார்த்துக்கயேன். .அப்படியே புள்ளைங்களுக்கு நடுவுல என்னையை ஒர பார்வையை பார்க்கும்.. புள்ளைங்களை கூட மடியில் படுக்க வச்சு தட்டி குடுத்து தூங்க வச்சிரும்க்கா.

உங்க ரொமான்ஸ்
என்னடி.. இப்படி வெட்கப்படற .. உங்க ரொமான்ஸ் கதையான்னு ராணிக்கா கேட்கறாங்க. அதை வுடுக்கா... நதியா மேடம் வந்ததுலேர்ந்து ரோஜா சீரியலை பார்க்க ஆரம்பிச்சுது. அவங்க ரொமான்ஸை பார்த்து என்மேல உசுரா இருந்துச்சு.. ஹூம்.. பெருமூச்சு விடறா கலா.

எதுக்கு பெருமூச்சு
நல்லாத்தானே நடந்துகிட்டு இருக்கான் உன் புருஷன்.. இப்போ என்ன பெருமூச்சுன்னு கேட்கறாங்க. இப்போ, ரோஜாவும், அர்ஜுனும் உண்மையான தம்பதி இல்லேன்னு வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போகப் போகுதுக்கா. அர்ஜுன் அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு போயி, பாவம் ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. ரொம்ப சீரியஸா கதை போகுதுக்கான்னு கலா கவலைப்படறா.

உனக்கு என்ன
கதைதானேடி.. உனக்கென்ன கவலைன்னு கேட்க, .. ராணிக்கா சீரியலை பார்க்க எம் புருஷன் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து குளிச்சுட்டு, சாப்டுட்டு டிவி முன்னால உட்கார்ந்துரும். யாராவது வந்து குடிக்க கூப்பிட்டாலும் போவாது. கோயிலுக்கு பின்னால கூட்டமா உட்கார்ந்து சீட்டு விளையாடுவாங்களே அந்த இடத்துக்கும் போவாது. பொட்டாட்டம் வூட்டுக்கு வந்து ரோஜா சீரியல் பார்க்கும். இப்போ ஒரே சோகமா போவுதா.. பார்க்குமோ.. இல்லை சீட்டாட போயி, குடிச்சுட்டு வருமோன்னு கவலையா இருக்குக்கா...

உன்கவலை
அடிப்பாவி.. இதுதானா உன் கவலை.. இது புதுசா இருக்கேடி.. பரவால்ல இதுவும் நல்லாத்தானே இருக்கு. சீரியல் உன் புருஷனை திருத்தி இருக்கே... இனிமேயும் உன் புருஷன் சீரியல் பார்ப்பாண்டி. அந்த ரோஜா பொண்ணு அவ்ளோ அழகாமே.. என்னக்கா சொல்றே நீ.. என் புருஷன் என்கிட்டே ரொமான்ஸ் பண்ணத்தான் சீரியல் பார்த்துச்சு.. என்னமோ என் புருஷன் அந்த ரோஜா புள்ளையை சைட் அடிக்க சீரியல் பார்த்த மாதிரி தப்பா பேசற.. இதுக்குதான்க்கா உன்கிட்ட ஒன்னும் சொல்றதில்லைன்னு கலா புலம்ப.. போடி.. போடி...இப்படித்தான் சொல்லுவே மறுபடியும் என்கிட்டே வருவே.. அப்போ வச்சுக்கறேன்னு சொல்றாங்க ராணி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications