Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலிக்கறவங்களால காதலிக்கறவங்க ஃபிரண்ட்ஸ் படும் பாடு இருக்கே... அயயயயோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலிக்கறவங்களால் அவர்கள் நண்பர்கள், தோழிகள் படும் பாடு குறித்த விவாதம் ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடைப்பெறுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இயக்குநர். கரு பழனியப்பன் காதலரா இருக்கும் உங்கள் நண்பர் எங்கு உங்களை அழைத்துப் போவார், எங்கு தவிர்த்துவிட்டு போவார் என்று கேட்டார்.

இவங்க அவுட்டிங் எங்காவது போகணும்னா நண்பர்கள் கூட்டமா அழைச்சுக்கிட்டு போகணும்னு சொல்லுவாங்க சார். நம்ம பேரை சொல்லி வீட்டில் வெளியூர் சொல்லிட்டு போலாம்னு திட்டம் போட்டு இப்படி செய்வாங்க சார். பார்க், படத்துக்கு போகணும்னா எங்களை கழட்டி விட்ருவாங்க சார் என்று ஒரு பையன் சொன்னார்.

காலேஜ் இருக்கும்போது எங்காவது போகணும்னா கட்டடிச்சுட்டு எங்களையும் கூட்டிகிட்டு போவாங்க சார். காலேஜ் இல்லாத நாளில் சுத்த போகணும்னா எங்களை கழட்டி விட்ருவாங்க சார் என்று ஒரு பெண் சொன்னார்.ஆனால் அம்மாகிட்டே என் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வருவா சார்னு சொன்னார் அந்த பெண்.

 வெளியூர் டூர்

வெளியூர் டூர்

அதோ அங்கெ இருக்கான் பாருங்க சார் அவன் என் ஃபிரண்ட். இவன் அவனோட ஆளு கூட வெளியூர் போகணும்னா ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட சொல்லுவான் சார். நான் வர முடியாதுன்னு சொல்றவனை எல்லாம் கம்பெல் பண்ணி கூப்பிட்டுக்கிட்டு, காசு இல்லேன்னு சொல்றவனுக்கு பணம் அரேன்ஜ் செய்துட்டு கூட போகணும் சார். அந்த ஊர் குளிரில் ஒரு காபி குடிக்க பத்து ரூபாய் தாடான்னு சில்லரை இல்லேன்னு கேட்டேன் இல்லேன்னு சொல்லிட்டான் சார்.

 60 ரூபாய் ஐஸ்கிரீம்

60 ரூபாய் ஐஸ்கிரீம்

திரும்பி வந்து பார்த்தா அவன் ஆளுக்கு 60 ரூபாய் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்து ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க சார்னு சொன்னார் ஒரு பையன். இல்லை சார் அது என் காசு இல்லை அவகிட்டே காசு வாங்கித்தான் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்தேன் என்று அந்த பையன் சொன்னார். இல்லை சார் அவன் போய் சொல்றன் சார் அவன் காசுதான் சார் அது என்று இவர் மீண்டும் சொன்னார். ஆனால், உள்ளூர் பார்க், பீச் போனால் என்னை கழட்டி விட்ருவான் சார் என்றும் சொன்னார்.

 பேசினா நடுங்கும்

பேசினா நடுங்கும்

சார் பார்க் பீச்சில் போயி நானே சும்மாத்தான் சார் உட்கார்ந்து இருப்பேன். அவளோட ஃபிரண்ட்ஸ் வந்தால் இவன் அழகா இருக்கான்னு பேச ஆசைப்படுவாங்க சார். இவனுக்கு பேச நடுங்கும் சார் என்று மீண்டும் அந்த பையன் சொன்னார்.இல்லை சார் அவன் பொய் சொல்றான் சார்.. எப்போதுமே அவன் கூட்டிகிட்டு போக மாட்டான் சார் என்று இந்த பையன் மீண்டும் சொன்னார்.

 கான் கால் போடுவோம் சார்

கான் கால் போடுவோம் சார்

பொண்ணுங்க காலேஜ் இல்லாத நாளில் உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு அவங்க ஆள் கூட சுத்த போயிருவாங்கன்னு சொன்னீங்களே.. அவங்க அம்மா உங்களுக்கு போன் பண்ணி என் பொண்ணு வந்துச்சான்னு கேட்டா என்ன சொல்வீங்கன்னு கரு. பழனியப்பன் கேட்டார். இங்கேதான் இருக்கன்னு சொல்லுவோம்.. எங்கே பேசனும் குடுன்னு கேட்டால் ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு கான்ஃ பிரன்ஸ் கால் போட்டு பேச சொல்லுவோம் சார் என்று அந்த பெண் சொன்னார்.

இப்படி சுவாரஸ்யமாக இருந்தது தமிழா தமிழா நிகழ்ச்சி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+