சின்ன கவுண்டர்... நாட்டாமை... இப்போ எஜமானும் வந்தாச்சுங்கோ....

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியல்லங்க.. இதுவரைக்கும் சின்ன கவுண்டரை பார்த்தோமுங்க...நாட்டாமையையும் பார்த்து போட்டோமுங்க..அட நேத்து பாருங்க என்ற சூப்பர் ஸ்டாரு எஜமானும் வந்து போட்டாருங்க.

நம்ம சின்னவருங்க முத்துசெல்வியை தேடிபோட்டு போறாருங்க...அங்க அந்த புள்ள சோடியா எடுத்த போட்டோவை வச்சு, அழகுபட்ட சோடின்னு ரசிச்சு பார்க்குதுங்க...அந்த புள்ளை சின்னவரை பார்த்துப்போட்டு எப்படியாச்சும் ஐ லவ் யூ சொல்லிப் போட்டுடணும்னு கனவு காணுதுங்க.

kanmani serial

என்ன புள்ள உன்னை அங்க இங்கேன்னு தேடிபோட்டு இருக்கேன்..நீ பேசாம இங்கன உட்கார்ந்து இருக்கேன்னு கேட்க.. இல்ல சின்னவரே.. உங்கிட்ட ஒண்ணு சொல்லணுமுங்கன்னு சொல்லுது.என்னது.. வெரசா சொல்லிப்போடுன்னு சின்னவரு சொல்ல, அந்த புள்ள ஐ..ஐ ன்னு மட்டுமே சொல்லி போடுதுங்க..அதுக்கு மேல வார்த்தை வல்ல.. வெறும் காத்துதானுங்க..

என்ன முத்து ரம்ப முக்கியமான விஷியம் பேசிபோடலாம்னு வந்தேன்.. நீ இப்பத்தான் ஆனா, ஆவன்னா சொல்லிப்போட்டு நிக்கற..நான் கண்டிஷனா கேட்டுபோடறேன்.. என்ன கண்ணாலம் கட்டிக்க ஒன்ற மனசுக்கு சம்மதம்தானேன்னு கேட்டு திரும்பி போடறாருங்க..அந்த புள்ளை ஆளையும் காணும்.. தேளையும் காணும்.

kanmani serial

சும்மா மான்குட்டி கணக்கா துள்ளிப்போட்டு ஓடுதுங்க. எங்கின்னு பார்த்தா மாலை கடைக்குங்க.. சின்னவரு. புள்ளைய கூடியும் காணுமே நாம தப்பா ஏதும் சொல்லிப் போட்டோமா.. இல்லை புள்ளைக்கு வெட்கம் வந்து போட்டுதான்னு ரோசனை பண்ணிக்கிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்றாருங்க..

இந்த புள்ளை திரும்பி ஓடிவர்றாளாங்காட்டியும் எங்க போயிருக்கும் கண்ணுன்னு பார்த்தா கையில மாலைங்க..அட மரத்துக்கு பொறத்தால ஒளிஞ்சு போட்டு சின்னவரே.. சின்னவரேன்னு கூப்டு போடுதுங்க.சின்னவரு எங்க புள்ள இருக்கேன்னு கேட்க... சாமிக்கு கட்டி வச்ச மாலையையே ஆண்டாளு போட்டு பார்த்த பொறவுதான் சாமிக்கு போட்டாங்க. அம்புட்டுட்டு லவ்வு சாமி மேல..

Now Ejaman also arrives in TV

எனக்கும் சின்னவரு மேல அப்பிடித்தான்னு சொல்லிப்போட்டு, கழுத்துல போட்டு கழட்டி, அட தூக்கி போடுதுங்க.. மாலையும்கூடியும் சின்னவரு கழுத்துல கரீக்குட்டா விழுந்து போடுதுங்க.. இங்கதானுங்க நம்ம எசமானைப் பார்த்தோமுங்க...

Now Ejaman also arrives in TV

பொறவாவது இந்த புள்ளை சின்னவரு சின்னவருன்னு கூப்பிடறதை நிறுத்திப் போடறாரா இல்லீங்க.. என்ன புள்ள கொரலு மட்டும்தான் வருது..எங்க இருக்கறன்னு கேட்டு போடறாரு.. சின்னவரே உங்க கழுத்துல விழுந்தது என் மனசு சின்னவரேன்னு ஒரே ரவுசு லவ்வு போங்க..

வெக்கத்துல இந்த புள்ள வூட்டுக்குள்ள ஓடிப் போயிருச்சுங்க...பொறவு என்ன நடந்துச்சுன்னு கேட்கறியளாக்கும்...நடக்கறது நடக்கறது காட்டியும் பார்ப்போம்னு வூட்டுக்கு போயிபோட்டாருங்க சின்னவரு..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+