சின்னவரு தேவர் மகன் கமல்ஹாசன் அவதாரமும் எடுத்து போட்டாருங்கோ..!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கலந்தடிச்சு ஒடிக்கிட்டு இருக்குதுங்க. ஒண்ணும் பிரியலீங்களாக்கும்...
அட.. இப்போ என்ற சாமி கமல்ஹாசன்..உங்களுக்கு தெரியாதுங்களா நானு என்ற கமலஹாசன் ஃ.பேனுங்க.. கடசீல பாருங்க என்ற கமல்ஹாசன் நடிச்சு போட்ட தேவர் மகன் படத்துலேர்ந்து சீனை சுட்டு இருக்காங்கோ...

மொதல்ல நாட்டாமை.. பொறவு சின்ன கவுண்டருங்க.. சரி கண்ணு கதை பஞ்சம் அவிங்களுக்கு வர்றது சகஜதானுங்களேன்னு உட்டுப் போட்டமுங்க.. சரி விடு கழுதைன்னு பார்த்தா நம்ம எசமானு வந்து போட்டாருங்க..
அதான் அந்த கண்ணு முத்து செல்வி வீசுற மாலை சின்னவரு கழுத்துல வந்து போடுதுங்களே..அந்த சீனு எசமான் சீனுதானுங்களே... சரி நம்ம மக்களை அவிய முட்டாளாக்குறாங்கன்னு நாங்க வுட்டுப்போட்டாலும் கெரகம் விதி தொரத்துதுங்க.. .அதானுங்க நம்ம தேவர் மகன். என்ற வூட்டு கமல்ஹாசன் நடிச்ச பட சீனும், கண்மணி சீரியலில் வந்து போட்டுதுங்க.
அதானுங்க..சின்னவரு முத்துசெல்விக்கு பார்த்து போட்ட மாப்பிள்ளை ஓடிப் போயிடறாருங்கோ.. சரி நான் வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கறேன்னு ரேவதி அப்பன் கிட்ட என்ற கமல்ஹாசன் சொன்னாரு பாருங்க..அது கணக்கா சின்னவருங்க அந்த புள்ளை முத்துசெலெவி அப்பன் கிட்ட, இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்லி போட்டு வந்துட்டு, பொறவு இந்த புள்ள முத்து செல்விகிட்ட, என்னை கண்ணாலம் கட்டிக்க சம்மதமான்னு கேட்கறாருங்க...
அப்பிடியே.. என்ற அழகுபட்ட கமல்ஹாசன் ரேவதி அக்காகிட்ட கேட்கற மாதிரி இருந்து போட்டுச்சுங்க அந்த சீனு.. பார்த்தீங்களா.. நான் சொல்லிப்போட வந்ததை மறந்து போட்டேனுங்க..
தேவர் மகன், எசமான், நாட்டாமை, சின்னக் கவுண்டர் படம் பார்த்து போடணும்.. அதுல வர்ற சீனு நினைவுக்கு வந்து போகோணும்னு நினைச்சியன்னா கண்மணி சீரியலை மிஸ் பண்ணாம பார்த்து போடுங்க.. கெரகத்த!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications