OTT App: zee5 இயங்குதளத்தில் ஓ மை கடவுளே படம்!
சென்னை: ஓடிடி இயங்குதளம் அண்மையில் ரிலீசான படங்கள், ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களை வாங்கி தங்களது ஆப் மூலம் ஒளிபரப்ப போட்டா போட்டியில் இருக்கின்றன.
கோவிட் 19 தொற்று லாக்டவுனுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ரிலீசான ஓ மை கடவுளே படத்தை zee5 இயங்கு தளத்தில் கண்டு களிக்கலாம். லாக்டவுன் நேரத்தில் இந்த படத்தின் உரிமத்தை வாங்கி இருக்கிறது zee5 இயங்குதளம்.
ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் சரியாக காதலர் தினத்தன்று வெளியான வித்தியாசமான காதல் படம்.

காதலுக்குள் கடவுள்
காதலுக்குள் கடவுள் புகுந்தால் என்ன கலவரம் நடக்கும்...இதை காண்பிக்க கடவுளாக விஜய் சேதுபதியும் நடித்து இருப்பார். காதலர்களுக்கு பிடித்த படம் என்று சொல்லலாம். காதலை விரும்பாதவர்கள் பார்க்கையில் என்ன கற்பனைடா சாமி என்றுதான் தோன்றும்.

தோழியே மனைவியாக
சிறுவயது முதலே தோழியாக இருந்த ரித்திகா சிங், அசோக் செல்வனை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்த, அவரும் தோழியை திருமணம் செய்துக்கறார். ஆனால், மனைவியாக ரித்திகாவை நினைத்து முத்தமிட கூட நட்பு அவரைத் தடுக்கிறது. ஆனால், போகிற போக்கில் ரித்திகாவை மனைவியாக ஏற்றுக்கொள்கிறார் எப்படி? படம் பார்த்தால்தான் தெரியும்...

வாணி போஜன்
தெய்வமகள் சீரியலில் நடித்தபோதே அனைவர் மனதையும் கொள்ளைக்கொண்டவர் வாணி போஜன். படத்தில் இவருக்கு காதல் தோல்வி...அப்போதே பாதி ரசிகர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது.மெருகு கூடி அழகாக காட்சி தருகிறார் வாணி போஜன்.

கால அவகாசம் இல்லை
பிப்ரவரி 14ம் தேதி ரிலீசான ஓ மை கடவுளே தியேட்டரில் ஓடுவதற்கு கால அவகாசம் இல்லாமல் போனது லாக்டவுனால். எனவே, சூட்டோடு சூடாக இந்த படத்தை வாங்கிவிட்ட zee5 இயங்குதளம். படத்தை பார்க்கும் வாய்ப்பை அளித்துள்ளது. காதல் என்றால் குஷியாகும் ரசிகர்கள் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் வாய்ப்பை அளித்து இருக்கிறது இந்த இயங்குதளம்.












Click it and Unblock the Notifications