Cook With Comali season 4: எல்லாரையும் விட ஷிவாங்கிக்கு சம்பளம் ரொம்ப கம்மியா?
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகளில் எல்லாரையும் விட சிவாங்கிக்குத்தான் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்களும் 12 கோமாளிகளும் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் வாரத்திற்கு ஒரு முறை எலிமினேட் செய்யப்படுவர்.
யார் சுவையாக வினோதமாக சமைக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு உதவி செய்ய கோமாளிகள் இருப்பர். இவர்களுக்கும் சமையல் குறித்த விழிப்புணர்வு இருந்தால் கஷ்டப்படாமல் குக்கை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லலாம்.

கோமாளிகளுக்கும் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வென்றார். இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார். மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகா டைட்டிலை வென்றார். அந்த வகையில் 4ஆவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் நடிகை விசித்ரா, சிருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜா அய்யப்பன், விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆன்ட்ரியானே, சிவாங்கி, கஜேஷ், கலை இயக்குநர் கிரன் ஆகிய 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அது போல் இந்த போட்டியில் புகழ், சுனிதா, ஜிபி முத்து, முகமது குரேஷி, மோனிஷா பிளஸ்ஸி, டைகர் தங்கதுரை, சிங்கப்பூர் திலீபன், சில்மிஷம் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பாலா கலந்து கொள்ளவில்லை. அது போல் மணிமேகலை முதல் 5 வாரங்கள் மட்டுமே கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கடைசி சில வாரங்களாக ஆங்கராக தனது பணியை தொடர்ந்தார். இந்த நிலையில் போட்டியாளர்கள் வாரந்தோறும் வெளியேற்றப்பட்டு கடைசியாக மைம் கோபி, விசித்ரா, கிரண், சிவாங்கி, சிருஷ்டி, ஆன்ட்ரியானே ஆகிய 6 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இறுதி போட்டி ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்த போட்டியின் வின்னராக சுசித்ரா வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி வரை அப்படிதான் டிரென்ட் இருந்தது. செஃப்கள் வெங்கடேஷ் பட்டும் தாமும் முடிவுகளை அறிவித்த போதுதான் அந்த டிவிஸ்ட் நடந்தது.
திடீரென 3ஆம் இடம் விசித்ராவுக்கு சென்றது. இதனால் அவரது முகமே வாடிபோனது. இந்த போட்டியின் டைட்டில் வின்னர் மைம் கோபி அறிவிக்கப்பட்டார். அவர் தனக்கு கிடைத்த ரூ 5 லட்சம் பரிசுத் தொகையை புற்றுநோய் அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டார். இந்த நிலையில் இரண்டாவது இடத்தை சிருஷ்டி பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் குக்குகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு எபிசோடுக்கு மைம் கோபிக்கு ரூ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் இருக்குமாம். விசித்ராவுக்கு ரூ 30 ஆயிரமும் ஷெரினுக்கு ரூ 35 ஆயிரமும், ஸ்ருஷ்டி, ஆன்ட்ரியானே ஆகியோருக்கு தலா 30 ஆயிரமும், விஜே விஷாலுக்கு 25 ஆயிரமும் ராஜ் அய்யப்பனுக்கு ரூ 26 ஆயிரமும் வழங்கப்பட்டதாம்.
ஆனால் ஷிவாங்கிக்கு ஒரு எபிசோடிற்கு ரூ 20 ஆயிரம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது எல்லாரை விடவும் குறைவான சம்பளம் ஷிவாங்கிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போ கோமாளிக்கு என்ன சம்பளம் இருக்கும் என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications