Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாணிஸ்ரீயை வட்டமடித்த அக்காவின் துரோகம்.. மகனின் இழப்பு! வளையல் முதல் கொண்டை வரை போன நடிகையின் புகழ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவர் துணை நடிகையாக நடிக்க வந்துவிட்டால், கடைசிவரை துணை நடிகையாகவே சினிமாவில் வலம் வருவார்கள்.. இதில் ஒருசிலர்தான் விதிவிலக்காக கதாநாயகி அந்தஸ்தை பெறுகிறார்கள்.. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரைத்துறையினரால் தவிர்க்க முடியாத நடிகை வாணிஸ்ரீ. 1960, 70களில் டாப் ஹீரோயினாக வலம் வந்த வாணிஸ்ரீ, அடிப்படையிலேயே மிகவும் துணிச்சலான பெண். சினிமாவுக்குள் இவர் எப்படி நுழைந்தார்? அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்ன? அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

வாணிஸ்ரீயின் நிஜப்பெயர் ரத்னகுமாரி.. வாணிஸ்ரீ பிலிம்ஸ் என்ற தயாரிப்பாளர்களின் படத்தில் நடிக்கும்போதுதான், வாணிஸ்ரீ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த நடிகர் எஸ்வி ரங்காராவ் இந்த பெயரை வாணிஸ்ரீக்கு மாற்றி வைத்ததாக சொல்வார்கள்.

Vanisri Old Actress vani sri

ரத்னகுமாரி என்கிற வாணிஸ்ரீ

ஆனால், தன்னுடைய சொந்த பெயரை மாற்றியமைத்தது வாணிஸ்ரீக்கு அப்போது பிடிக்கவில்லையாம். அதற்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தனக்கென உருவாக துவங்கியதுமே, பெயர் மாற்றத்தை பெரிதாக அவர் எடுத்துக் கொள்ளவில்லையாம்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1948ம் ஆண்டு, விவசாய குடும்பத்தில் பிறந்தார் வாணிஸ்ரீ.. அந்த காலத்தில் இந்தியாவையே அச்சுறுத்தி கொண்டிருந்த காசநோய்க்கு, வாணிஸ்ரீயின் மூன்று சகோதர, சகோதரிகளும் ஒரே மாதத்தில் பலியானார்கள்.. பிறகு வாணிஸ்ரீயும் அப்பாவும் உயிரிழக்க, ஆடு, மாடுகளை விற்று, வாணிஸ்ரீயையும், அவரது சகோதரியையும் படிக்க வைத்திருக்கிறார் அவரது அம்மா.

வாணிஸ்ரீ ஹீரோயின் சான்ஸ்

பள்ளி கலை நிகழ்ச்சியில் வாணிஸ்ரீ ஆடிய நடனத்தை பார்த்த கன்னட பட இயக்குநர் ஒருவர், சினிமாவில் நடிக்க அழைக்கவும், தன் அம்மாவின் பேச்சையும் மீறி வாணிஸ்ரீ சிறு வேடத்தில் நடித்தார்.. பிறகு கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறுசிறு கேரக்டர்களில் வாணிஸ்ரீக்கு வர துவங்கியது. அத்துடன், காங்கிரஸின் பிரச்சார நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

ஜெய்சங்கரை ஹீரோவாக வைத்து காதல் படுத்தும்பாடு என்ற படத்தை எடுக்க முடிவாகியிருந்தது.. காதலிக்க நேரமில்லை படப்புகழ் ராஜஸ்ரீயை அதில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால், ராஜ்யஸ்ரீ அப்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால், கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டது.

ஜெய்சங்கருடன் கதாநாயகி

இதனால் படத்தின் கதாசிரியர் கலைஞானம், ராஜஸ்ரீ நடித்து கொண்டிருந்த அந்த தெலுங்குபட ஷூட்டிங்குக்குகே நேரில் கிளம்பி சென்றார்.. அப்போதுதான் ராஜஸ்ரீக்கு தோழியாக நடித்துகொண்டிருந்த பெண்ணை பார்த்ததும் அசந்துபோய் நின்றார். உடனே அந்த பெண் யார்? என்று விசாரித்தபோது, ஆந்திராவை சேர்ந்த துணை நடிகை வாணிஸ்ரீ என்பதும், சினிமா சான்ஸுக்காக சென்னையில் தங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே வாணிஸ்ரீ பற்றி, டைரக்டர் ஜோசப் தளியத் என்பவரிடம் சொல்ல, அந்த நிமிடமே வாணிஸ்ரீக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. 1966ல் காதல் படுத்தும்பாடு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, ரசிகர், ரசிகைகளால் வரவேற்கப்பட்டார் வாணிஸ்ரீ.

வசந்த மாளிகை

எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என அத்தனை நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் வாணிஸ்ரீ. எம்ஜிஆருடன் கண்ணன் என் காதலன், சிவாஜி கணேசனுடன், வசந்த மாளிகை, உயர்ந்த உள்ளம் போன்ற படங்கள் இன்றுவரை வாணிஸ்ரீ திரைவாழ்வில் மாஸ்டர் பீஸாக உள்ளன.

இதில் வசந்த மாளிகை படத்தில் வாணிஸ்ரீ அணிந்திருந்த புடவை, நகைகள் தமிழக மக்களால் பெரிதும் கவரப்பட்டது.,. வாணிஸ்ரீ கொண்டை, வாணிஸ்ரீ வளையல், வாணிஸ்ரீ சேலை என்று கடைகளில் விற்கப்பட்டதாம்.

மீண்டும் சாவித்ரி

தாய்மொழி தெலுங்கு என்பதால், தெலுங்கிலும் வாணிஸ்ரீ கொடிகட்டி பறந்தார்.. நடிகை சாவித்ரியுடன் ஒப்பிட்டு பேசும் தெலுங்கு ரசிகர்கள் வாணிஸ்ரீயை கொண்டாடினார்கள்.. என்டிஆர், கிருஷ்ணம் ராஜு, ஷோபன் பாபு அப்போதை முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.. இந்திப்படங்களிலும் வாணிஸ்ரீ நடித்துள்ளார்.

1978-ல் கருணாகரன் என்ற டாக்டரை காதல் திருமணம் செய்து கொண்டார் வாணிஸ்ரீ.. இதற்குபிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில், சில வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படங்களில் மட்டும் மீண்டும் அக்கா, அம்மா ரோலில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்றோருடன் நடித்தார்.

சொந்த வாழ்க்கை துயரம்

வாணிஸ்ரீ தன்னுடைய ஒரே மகன், ஒரே மகளை டாக்டராக்கினார்.. இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார்.. ஆனால் சொந்த வாழ்க்கை வாணிஸ்ரீக்கு துயரத்தையே தந்தது.. 5 வயதில் அப்பாவை பறிகொடுத்த வாணி, அண்ணனை 40 வயதில் இறந்தார். கடந்த 2020ல், வாணிஸ்ரீயின் மகன் வினய வெங்கடேஷ கார்த்திக் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் இழப்பிலிருந்து வாணிஸ்ரீயால் மீளவே முடியவில்லை.

இதற்கு நடுவில், தன்னுடைய சகோதரி தரப்பிலிருந்து சொத்து பிரச்சனையும் வெடித்தது.. பிறகு அந்த சட்டப்போராட்டத்திலும் வென்று, இழந்த சொத்துக்களை மீட்டார்.. அரசியலில் ஈடுபாடு காட்டினாலும், பலருக்கும் சத்தமில்லாமல் இப்போது வரை எத்தனையோ உதவிகளை, சேவைகளை செய்து கொண்டிருக்கிறார் வாணிஸ்ரீ..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+